மேலும் அறிய
Advertisement
கட்டபொம்மன் பிறந்தநாள்விழா; மதுரையில் வாகன மேற்கூரையில் தொங்கியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் விழா: பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழக முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டியர் கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு காவல்துறை சார்பாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க.,வின் எடப்பாடி அணி சார்பாக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தன்னுடைய ஆதரவாளருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
this is how south tamilnadu youths celebrates freedom fighter Veerapandiya katta bomman 264th birthday at Madurai. 🥲😩@abpnadu @abplive @ABPNews @arunreporter92 pic.twitter.com/IbhqaqaHt3
— Krishna Kumar (@k_for_krish) January 3, 2023
அதேபோல் ஓ.பி.எஸ்., அணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து மதிமுக சார்பாக துரை வைகோ அவர்கள் மற்றும் தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டபொம்மன் சிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனத்தில் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து கொடிகளை அசைத்தபடியும் கதவின் ஓரத்தில் 10பேர் தொங்கிய படியும் சாகசப் பயணம் மேற்கொண்டனர். சிலை அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையின் அறிவுறுத்தலையும் மீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை அங்கும் இங்கும் அசைத்தபடி காரை இயக்கி அச்சுறுத்தும் விதமாக மேற்கூரையில் பயணித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion