மேலும் அறிய

மதுரையில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கமா?.... கூடவே கூடாது - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை என ஆட்சியர் சங்கீதா தகவல்

மதுரையில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்  முகிலன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
 
கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மனு
 
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் "மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்ஸ் எனும் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிகம் எடுக்க அனுமதித்தால் முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாப்பட்டி பல்லுயிர் தளம் பாதிக்கப்படும்.
 
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை

ஆகவே டங்ஸ்டன் கனிமம் எடுக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது" என மனுவில் தெரிவித்துள்ளனர், மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில் "மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. கனிமம் எடுக்க தமிழக அரசிடம் மத்திய அரசு தடையில்லா சான்று பெற வேண்டும். மதுரையில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக அவ்வப்போது புரளியாக கூறப்படுகிறது, தங்களின் கோரிக்கை மனுவை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என கூறினார்.
 
எப்போதும் அனுமதிக்கமாட்டோம்

மேலும் அளித்த பின் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்படி டங்க்ஸ்டன் சுரங்க ஆலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. மதுரை மேலூர் பகுதியை மதுரையின் பண்பாட்டு மண்டலமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். வேதாந்தாவின் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பைத் தடுத்த நிறுத்த வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐக்கிய சமூக நீதிப் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ் தேச குடியரசு இயக்கம், நாணல் நண்பர்கள்,தமிழ் தேசிய பேரியக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், அரிட்டாபட்டி ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் நாணல் நண்பர்கள், பரம்பு மலை பாதுகாப்பு இயக்கம், மகளிர் ஆயம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கச்சைகட்டி  மாற்றத்தின் இளைஞர் குழு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முதற்கட்டமாக மனு அளித்தோம்” என தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry on narikuravar : வீடுகேட்ட நரிக்குறவர்! மிரட்டிய பொன்முடி! ”யோவ் சும்மா இருய்யா”H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
Embed widget