மேலும் அறிய
Advertisement
Madurai: வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு ; அடிக்கடி பணம் எடுக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி
கடந்த 4-ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஒரு முறை மட்டுமே கடந்த வாகனங்களுக்கும் அதிக முறை கடந்ததாக வங்கியில் இருந்து கட்டணத் தொகையை எடுப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டோல்கேட் கட்டணம் திடீரென வாகன உரிமையாளர்களின் வங்கியிலிருந்து எடுக்கப்படுவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டோல்கேட்
பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைப்பது, வாகன நெரிசல் இல்லாத விரைவான பயணம், தரமான சாலைகளில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் என்று பல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் உட்பட நாடு முழுவதும் அறிமுகமான புதிதில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி, கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு அனுமதித்து வந்தனர். சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்தினாலும் விரைவான, பாதுகாப்பான பயணம், தரமான சாலை என்று மக்கள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கை முறைக்கு ஏற்ப டோல்களில் பல டிஜிட்டல் சேவைகளும் உள்ளது. இந்நிலையில் மதுரை வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டோல்கேட் கட்டணம் திடீரென வாகன உரிமையாளர்களின் வங்கியிலிருந்து எடுக்கப்படுவதால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டோல்கேட் அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் குவிந்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல முறை பணம் எடுப்பதாக புகார்
தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை அம்மா திடல் அருகே உள்ள வண்டியூர் டோல்கேட்டில் கடந்த 4-ம் தேதி முதல் சாப்ட்வேர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டோல்கேட்டுகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென இன்று காலை முதல் கடந்த 4-ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வண்டியூர் டோல்கேட்டை கடந்த வாகனங்களின் உரிமையாளர் வங்கிகளில் இருந்து திடீரென கட்டணம் எடுக்கப்படுவதால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் கட்டணத்தை வங்கியில் இருந்து எடுப்பதால் பதட்டமடைந்த வாகன ஓட்டிகள் டோல்கேட் அலுவலகத்தில் குவிந்து வருவதால் பரபரப்பு அடைந்துள்ளது. தற்போது வரை தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாத நிலையில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படாமல் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பின்பாக வசூலிக்கப்படும் என டோல்கேட் நிர்வாக ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த 4-ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஒரு முறை மட்டுமே கடந்த வாகனங்களுக்கும் அதிக முறை கடந்ததாக வங்கியில் இருந்து கட்டணத் தொகையை எடுப்பதாக வாகன ஓட்டிகள் புகார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "பஸ் ஏற வந்தாலே தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Keezhadi Excavation: கீழடியில் "தா" என்ற தமிழி எழுத்து பொறிப்பு பானை ஓடு கண்டுபிடிப்பு !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion