TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சமையலும் காய்கறிகளும்
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக இருக்கும். அந்த வகையில், காய்கறி சந்தையில் எந்த காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் தக்காளி மற்றும் வெங்காயத்தை போட்டி போட்டு வாங்குவார்கள். ரசம் முதல் பிரியாணி வரை ருசியை அதிகரித்து கொடுப்பது தக்காளியும் வெங்காயம் தான். இதன் விலையானது உயர்ந்தால் உச்சத்தை தொடும் அதுவே சரிந்தாலும் அடிமாட்டு விலைக்கு விற்பனையாகும். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள்.
ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்
ஆனால் தற்போது மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால் செடியிலேயே தக்காளி அழுகிவிடுகிறது. இதனால் தக்காளி விளைச்சல் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்போது 70 ரூபாய்க்கு கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளி பெரிய பாக்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய் என 1700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரக்காய் ஒருகிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும்,பீட்ரூட் ஒருகிலோ 30 ரூபாயக்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
குடைமிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 25 ரூபாய்க்கும், இஞ்சிஒரு கிலோ 70 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ20 முதல் 50 ரூபாய்க்கும்,பாவக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒருகிலோ 35முதல் 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






















