Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா புயல் காரணமாக பல இடங்களில் சூறைக்காற்றோடு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 56 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் சூறைக்காற்று
டிட்வா புயல் காரணமாக நேற்று தென் மாவட்டங்களில் சூறைக்காற்றோடு மழை பெய்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தற்போது டிட்வா புயல் நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 190 கிமீ, காரைக்கால் 200 கிமீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. புயல் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று பகலில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு இன்று மாலை அல்லது இரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும். அப்போது சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் இன்று (29.11.2025) இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும் எனவும் வானிலை மையம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது.
56 விமான சேவைகள் ரத்து
இதனை காரணமாக சென்னையில் இருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானங்களும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட இருந்த 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் ஆகிய இடங்களை மிரட்டி வரும் டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, யாழ்பாணம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து இயக்கப்படும் 16 விமானங்க்ளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரி இருந்து பெங்களூரு, ஐதரபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து நாளை மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக விமான சேவையும் ரத்து
மேலும் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் நாளை காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விமானம் ரத்து தொடர்பாக பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் இயக்கங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






















