மேலும் அறிய
மதுரையில் பள்ளி மாணவியை கடித்த லேபர்டாக் நாய்.. பின்னர் மாணவியின் தாய்க்கு நேர்ந்த கொடூரம் !
கடைக்கு சென்ற பள்ளி மாணவியை கடித்த லேபர்டாக் இன நாய் - தட்டிகேட்ட மாணவியின் தாயாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.

நாய் கடி
Source : whatsapp
நாய் கடித்த அச்சத்தில் இருந்து தனது மகள் இன்னும் மீளவில்லை, பள்ளிக்கு கூட செல்ல முடியாமல் உள்ளார். குடியிருப்பு பகுதிகளுக்குள் நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என, மாணவியின் தந்தை வேண்டுகோள்.
மாணவியை கடித்த நாய்
மதுரை மாநகர் நியூஜெயில் ரோடு மில்காலனி பகுதியை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் - நேசலெட்சுமி தம்பதியரின். இவர்களது 12 வயது மகளான பள்ளி மாணவி ( சக்தி ) மில் லைன் பகுதியில் உள்ள தெருவில் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்துவந்துள்ளார். அப்போது லேபர் லைன் பகுதியில் விஜய்சாரதி என்பவரது வீட்டில் இருந்த லேபர் டாக் இன நாய் திடிரென மாணவியின் காலில் கடித்து காயம் ஏற்படுத்தியது. இதனால் பதற்றமடைந்து வலியுடன் வீட்டிற்கு ஓடுவந்த மாணவி நாய் கடித்தது குறித்து தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவியின் தாயார் தனது மகளுடன் சென்று நாய் கடித்தது குறித்தும், பாதுகாப்பாக வளர்க்கலாமே என நாயின் உரிமையாளரான விஜய் சாரதியிடம் கூறியுள்ளார்.
வழக்குப் பதிவு
அப்போது மாணவியின் தாயாரை விஜய்சாரதி தள்ளிவிட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் மாணவியின் தாயாருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதனிடையே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துசென்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பின்னர் தன்னை தாக்கிய நாயின் உரிமையாளர் விஜய்சாரதி மற்றும் அவரது உறவினர் சத்யா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாயார் அளித்த புகாரின் கீழ் கரிமேடு காவல்துறையினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மாணவிக்கு லேபர் டாக் நாய் கடித்ததன் காரணமாக கடந்த மூன்று தினங்களாக பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறையில் இருந்துவருகிறார். மதுரையில் வீட்டில் வளர்த்த லேபர் டாக் இன நாய் மாணவியை கடித்த விவகாரத்தில் நாயை வீட்டிற்குள் கட்டிப் போட்டு வளர்க்கலாமே, என கூறிய மாணவியின் தாயாரையும் நாயின் உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்போடு வளர்க்க வேண்டும்
இது குறித்து பேசிய மாணவியின் தந்தை..,” இது போன்ற குடியிருப்பு பகுதிகளுக்குள் வளர்க்கக்கூடிய நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். எனவும், நாய் கடித்ததால் தனது மகள் இப்போது வரைக்கும், அச்சத்தில் இருந்துவருகிறார். இரு நாட்களாக பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் நாய்களை வளர்ப்பவர்கள் மிகுந்த பாதுகாப்போடு வளர்க்க வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement




















