மேலும் அறிய
ஜனநாயகனை தடுப்பது ஜனநாயகம் அல்ல.. மதுரையில் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் !
ஜனநாயகன் திரைப்படத்தை வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ பேட்டி.

வைகோ
தி.மு.க., காங்கிரஸ் கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது. - மதுரையில் வைகோ பேட்டி.
வைகோ செய்தியாளர் சந்திப்பு
மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியார்களை சந்தித்து கூறுகையில்...,” மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி எஃகு கோட்டை போல் பலமாகவும் உறுதியாகும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி எங்கள் அணி மிகுந்த முன்னோட்டத்தோடு அனைவரையும் முந்தி கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான மிகப் பெருமையான வெற்றி பெறும். திராவிட முன்னேற்ற கழகம் தனி பெரும்பான்மை பெற்று திராவிட மாடல் ஆட்சியை 2026 பின் தொடரும் என்று முழு நம்பிக்கை உள்ளது.
டி.டி.வி கூட்டணி குறித்த கேள்விக்கு?
கட்சிகள் அணி மாறும் போது, மாறக விமர்சனம் செய்வது சகஜம் தான். ஜனநாயக நாட்டில் தமிழ்நாடு மட்டுமல்ல மகாராஷ்டிரா எல்லா இடங்களிலும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஒருவருக்கு ஒருவர் மாற்றி, மாற்றி கருத்துக்கள் பேசிக்கிறார்கள். நான் யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இப்போது இருக்கிற கூட்டணியை வலுவாக உள்ளது. வேறு, யாரு வருவார்களா என்னும் என்பது பற்றி செய்தி எனக்கு ஒன்னும் இல்லை.
திமுக காங்கிரஸ் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு?
கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும், கூட்டணி பற்றி பேசக்கூடும் என்று இன்று செய்திகள் வெளியாகி உள்ளது. சிறு சிறு மனக்கசப்புகள் ஒருவருக்கொருவர் ஒரு சிலருக்கு இருந்தாலும் தலைமை அளவில் பேசி முடிக்கிற பொழுது அதெல்லாம் காணாமல் போய்விடும் கருத்து வேறுபாடு.
திருச்சி இரண்டாம் தலைநகரம் கனிமொழி கோரிக்கை குறித்த கேள்விக்கு
நல்லது தான் தமிழ்நாட்டுக்கு மையப்பகுதி அதனால் அந்தக் கருத்தை சொல்லி இருக்கலாம் கொள்கை முடிவு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு
ஏற்கனவே நமக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சகம் செய்து தொடக்கத்தில் இருந்தே நாலு வருடம் காலமாக நரேந்திர மோடி அரசு தமிழக நாட்டு வஞ்சகம் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஆளுகிற மாநிலங்களுக்கு அதிகமாக நிதி இருக்குவது திட்டங்களை தருவது நமக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை. ஆனால் மதுராந்ததிற்கு வந்து இஷ்டத்துக்கு போய் கிளை அவிழ்த்து விட்டு தலைமை அமைச்சர் நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியெல்லாம் ஒன்றும் எடுபடாது. திராவிட மாடல் அரசு எல்லா தரப்புக்கும் தேவையான நலத்திட்டங்களை வழங்கி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் அறிவித்திருக்கிறார்கள்
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு
அதைப்பற்றி என்ன காரணங்கள், படத்தில் என்ன செய்திகள், என்ன கருத்துகள், எதற்காக தள்ளி போகிறது, என்று எனக்கு முழு விவரம் தெரியாது. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
Before You Go
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















