மேலும் அறிய
செல்லூர் ராஜூவிற்கு எதிராக தேர்தலில் நில்லுங்கள்.. அமைச்சருக்கு, டாக்டர் சரவணன் சவால் !
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கோலாகலமாக கொண்டாடினார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் டாக்டர் சரவணன்
Source : whats app
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை 4வது முறை வெற்றி பெற வைப்போம். யாராவது பேசற தி.மு.க., மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரை எதிர்த்து நிற்க சொல்லுங்கள். என டாக்டர் சரவணன் சவால் விடுக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரை நரிமேட்டில் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் 77 பெண்கள் தீச்சட்டி, 77 பெண்கள் பால் குடம் மற்றும் 77 இளைஞர்கள் தீபச்சுடர் ஏந்தி வந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செய்தனர். மேலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கட் ஆவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து மரியாதை செய்தனர். 1000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜுவை நிறுத்தி நான்காவது முறையாக வெற்றி பெற வைப்போம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில் "தமிழகத்தில் 2026 இல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை ஆண்டுகால ஆட்சி காலத்தில் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக மும்மொழி கொள்கை தொடர்பாக நாடகம் ஆடி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன 200 தொகுதிகளில் அதிமுக வெற்றியடையும். தி.மு.க., 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2026 இல் தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும்.
மதுரையில் 10 தொகுதியில் திமுக வெற்றிபெறுவோம் என அமைச்சர் மூர்த்தி சொல்லியுள்ளாரே?
நீங்கள் கேட்கும் கேள்வியிலையே பதில் இருக்கிறது. மூன்று முறை அதிமுக மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக செல்லூர் ராஜூ வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் 4-வது முறையாக அண்ணன் செல்லூர் ராஜூ தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். முடிந்தால் இது குறித்து பேசும் திமுக மாவட்ட செயலாளர், எங்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எதிராக மேற்கு தொகுதியில் தேர்தலில் நிற்கட்டும் “ என அமைச்சர் மூர்த்திக்கு எதிராக சவால் விடும்படியாக பேட்டியளித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மேற்கில் சூரியன்.. உதிக்கிறதா? - செல்லூர் ராஜூ தொகுதியில் அமைச்சர் மூர்த்தியால் டென்ஷன் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இதை செய்தால் போதும் தேர்தலில் வெற்றியடைலாம் - அமைச்சர் பி.டி.ஆர் தொண்டர்களிடம் உற்சாகம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















