மேலும் அறிய

மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!

2025 - 26 ஆம் நிதி ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டம் 3.5 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை மார்ச் மாதமே நிறைவேற்றப்பட்டுவிட்டது.

திருநெல்வேலி கங்கைகொண்டானில் இருந்து மேற்கு மத்திய ரயில்வேக்கு சரக்கு பெட்டகங்களும் அனுப்பப்பட்டன. இதன் மூலம் இந்த சாதனை அளவை எட்ட முடிந்தது.

முதன்முறையாக 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது.
 
மதுரை ரயில்வே கோட்டம் முதன்முறையாக 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ரயில்வே பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, இதர பிரிவு வருமானங்கள், முக்கியமான பாதுகாப்பு சம்பந்தமான பணிகள் ஆகியவற்றிற்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படும். செயல்பாடுகளை முன் திட்டமிடுவதற்காக இது போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதுபோல இந்த 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டம் 3.5 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளது.
 
இந்த இலக்கை முதன் முறையாக மதுரை கோட்டம் இந்த நிதி ஆண்டு முடிவதற்கு முன்பாக புதன்கிழமை (மார்ச் 25) அன்றே எட்டிவிட்டது. விவசாய உரம், நிலக்கரி, உணவுப் பொருட்கள், சிமெண்ட், பெட்டகங்கள் போன்றவற்றை மதுரைக்கு கோட்டத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளது. முதன் முறையாக தூத்துக்குடி மீளவிட்டானிலிருந்து கொல்கத்தாவிற்கு பட்டாணி, வடகிழக்கு மாநிலங்களுக்கு மற்றும் வாரணாசிக்கு மைசூர் பருப்பு சரக்கு ரயில் மூலம் அதிக அளவில் அனுப்பப்பட்டன. திருநெல்வேலி கங்கைகொண்டானில் இருந்து மேற்கு மத்திய ரயில்வேக்கு சரக்கு பெட்டகங்களும் அனுப்பப்பட்டன. இதன் மூலம் இந்த சாதனை அளவை எட்ட முடிந்தது. 
 
சாதனையை புரிந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாராட்டு
 
மதுரை கோட்டத்தில் பழனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, செட்டிநாடு, மானாமதுரை, ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், கங்கைகொண்டான், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், மீளவிட்டான், வாடிப்பட்டி, கூடல் நகர், தேனி மற்றும் துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட்ஸ், தாழையூத்து இந்தியா சிமெண்ட்ஸ், தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தூத்துக்குடி துறைமுகம், கப்பலூர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சரக்கு முனையம் போன்ற இடங்களில் சரக்கு நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை புரிந்த அதிகாரிகளையும், ஊழியர்களையும் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பாராட்டினார்.

தலைப்பு செய்திகள்

மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget