மேலும் அறிய
Advertisement
மதுரையில் வடை கடைக்குள் புகுந்த ரேஸ் பைக் - இருவர் படுகாயம்
மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் வடை கடைக்குள் வண்டியை விட்ட இளைஞர். கொதிக்க கொதிக்க எண்ணெய் இருந்ததால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...#Speeding #madurai @abplive @arunreporter92 pic.twitter.com/y0eJFTHyav
— Krishna Kumar (@k_for_krish) December 27, 2022
இருப்பினும் கூட பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் அதிவேகமாக மதுரை மாநகரை சுற்றி வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகனத்தை இயக்குகிறார்கள். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அழகப்பா நகர் நோக்கி வந்த விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி சாலை ஓரமாக நடைபெற்று வரும் வடை கடைக்குள் புகுந்து விட்டது.
வடைக்கடைக்குள் புகுந்த ரேஸ் பைக் - இருவர் படுகாயம் !
— arunchinna (@arunreporter92) December 27, 2022
மதுரை திருப்பரங்குன்றம் அழகப்பன்நகர் சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டிசென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வடைகடைக்குள் புகுந்த்தில் சூடான எண்ணெய் கொட்டியதில் கடை பணியாளர்கள் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.#Madurai pic.twitter.com/R8SiA3Hoq4
வடை கடையில் எண்ணெய் சூடாக இருந்ததால் எண்ணெய் தெரித்ததில் வடைகடையின் உரிமையாளர் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டியும் படுகாயம் அடைந்துள்ளார் இருவரும் தற்சமயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழங்காநத்தம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்
மதுரை மாநகரில் சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இவர்களால் பல பொது மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் இரும்பு கரம் கொண்டு இவர்களை தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion