மேலும் அறிய
Advertisement
மதுரையில் ரூ.68 லட்சம் மதிப்பிலான பொங்கல் வேட்டி, சேலைகள் எரிந்து நாசம் - போலீஸ் வழக்கு பதிவு
தீ விபத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29,232 சேலைகளும், 12,500 வேட்டிகளும் எரிந்து நாசமானது. இது தவிர சேதமான பிற பொருட்கள் மற்றும் நாற்காலிகளின் விலை குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள், இதர விவரங்கள் முழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து !
— arunchinna (@arunreporter92) January 9, 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி- சேலை பண்டல்கள், கம்ப்யூட்டர், ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.@SRajaJourno | #Madurai pic.twitter.com/ves1Ny6lIf
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29,232 சேலைகளும், 12,500 வேட்டிகளும் எரிந்து நாசமானது. இது தவிர சேதமான பிற பொருட்கள் மற்றும் நாற்காலிகளின் விலை குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: வீடு கட்டுவதற்காக பெண்ணிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion