Car Black Film: காரில் இருக்கும் கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் - மதுரையில் போலீஸ் அதிரடி
காவல்துறை தலைவரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் காவல் (police) என எழுதி இருந்தாலும் அதனையும் காவல்துறையினர் அகற்றினர்.
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை குறைக்கும் விதமாக மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை , குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை கைது செய்வது அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
குற்ற சம்பவங்களை குறைக்க மதுரை மாநகர காவல்துறையினர் விதிமீறி 500-க்கும் மேற்பட்ட கார்களில் ஒட்டப்பட்டபட்டிருந்த கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றி 50 ஆயிரம் ரூபாய் அபராத விதித்து நடவடிக்கை..
— Arunchinna (@iamarunchinna) July 20, 2022
Further reports to follow @abpnadu#Madurai #car | #Police @gagsshri | @ManiTamilMP | pic.twitter.com/KQ8Qf2CZFt
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்