மேலும் அறிய

மதுரை: சாலையில் தொலைந்த பணம்... சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த பெண் காவலர்கள்!

பணத்தை தொலைத்துவிட்டு மனவேதனையில் இருந்த நாகரத்தினத்தை தொடர்புகொண்டு காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தத்தால் மன மகிழ்ச்சியில் பெண் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மதுரையில் சாலையில் சிதறிகிடந்த பணம் - பணத்தை இழந்து மனவேதனையில் இருந்த நபர் - வாகன பதிவெண்ணின் அடிப்படையில் பணத்தை தொலைத்த நபரை கண்டறிந்து  ஒப்படைத்த காவல்துறையினர் - வியக்க வைத்த  காவல்துறையினரின் மதிநுட்ப செயல்.

பேரனுக்கு வெள்ளிக் கொலுசு
 
மதுரை மாநகர் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் இன்று மதியம் தனது பேரனுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக தெற்கு ஆவணி பகுதியில் உள்ள நகைகடை பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்த நாகரத்தினம் பாக்கெட்டில் வைத்த பின்னர், தனது போனை எடுத்து பேசிய போது 5 ஆயிரம் ரூபாய் பணம் கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பிங்க் பேட்ரோல் பெண் காவலர் தீபிகா பைக் நிறுத்துமிடத்தில் கீழே பணம் ஆங்காங்கே சிதறிகிடந்துள்ளதை பார்த்து அதனை எடுத்துள்ளார். அதில் 4900 ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள போக்குவரத்து காவல்துறையினரிடம் இது தொடர்பாக கூறியுள்ளார்.
 
உரிமையாளர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர்
 
பணத்தை உரியவரிடம் எப்படியாவது ஒப்படைக்க வேண்டும் என நினைத்த காவல்துறையினர் போக்குவரத்து ஆய்வாளர் ஷோபானா தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் பணம் கிடந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 பைக்குகளின் பதிவெண்களை சிசிடிவி கேமிராக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக எடுத்து ஒவ்வொரு வாகன உரிமையாளர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது நாகரத்தினத்தையும் தொடர்பு கொண்டு பேசியபோது தனது பணத்தை தவறுவிட்டுவிட்டதாக கவலையுடன் கூறியுள்ளார். இதையடுத்து் நாகரத்தினத்திற்கு ஆறுதல் தெரிவித்து பணத்தை காவலர் எடுத்துவைத்திருப்பதாகவும் அதனை பெற்றுகொள்ள வருமாறும் கூறியதோடு ஏடிஎம்மில் பணம் எடுத்தது மற்றும. அவரது பணம் தானா என விசாரணை நடத்திய பின்னர் காவலர் தீபிகா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா ஆகியோர் பணத்தை தொலைத்த இடத்தில் வைத்து நாகரத்தினத்திடம் பணத்தை ஒப்படைத்தனர்.
 
பெண் காவல்துறையினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
 
பணத்தை தொலைத்துவிட்டு மனவேதனையில் இருந்த நாகரத்தினத்தை தொடர்புகொண்டு காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தத்தால் மன மகிழ்ச்சியில் பெண் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். மதுரையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தொலைத்த நபரை கண்டறித்து பணத்தை ஒப்படைத்த பெண் காவல்துறையினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget