மேலும் அறிய
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
மீன்களின் விலையும் குறைந்த நிலையில் ஆங்காங்கே உள்ள மீன் சந்தைகளில் மீன்களை வாங்க, பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர்.

இறைச்சி மற்றும் மீன்
Source : ABPLIVE AI
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் இறைச்சி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மட்டன் கிலோ 700 ரூபாய்க்கும், சிக்கன் கிலோ 119க்கும் விற்பனை செய்யப்படும் நிலையிலும் இறைச்சி விற்பனை சந்தைகள் வெறிச்சோடியது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
புரட்டாசியில் அசைவ உணவுகளை உண்பதை முழுவதுமாக தவிர்ப்பார்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் ஏராளமானோர் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதோடு, குடும்பத்தில் உள்ளவர்களும் அசைவ உணவுகளை உண்பதை முழுவதுமாக தவிர்ப்பார்கள். இதன் காரணமாக புரட்டாசி மாசம் தொடங்கிய, நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள அனைத்துவகை இறைச்சிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் மட்டன் கிலோ 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கிலோ 700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மட்டன், சிக்கன், தலைக்கறி, குடல், நாட்டுகோழி, காடை விலைகள் மதுரையில் எவ்வளவு தெரியுமா?
மட்டன் எலும்பு கறி 700 ரூபாய்க்கும், தனிக்கறி 800 ரூபாய்க்கும், செவரொட்டி கிலோ : 2800 ரூபாய்க்கும் , வாட்டிய தலைக் கறி 450் ரூபாய்க்கு கால் வாட்டியது 500 ரூபாய்க்கும், குடல் கிலோ 280 ரூபாய்க்கும் , நல்லி எலும்பு கிலோ 540 ரூபாய்க்கும், சிக்கன் உயிருடன் கிலோ 119 ரூபாய், தனி சிக்கன் 170 ரூபாய்க்கும், போன்லெஸ் 340 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கறி கிலோ 600 ரூபாய்க்கும், காடை 50 ரூபாய்க்கும் என விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
வெறிச் சோடியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்
விலை வீழ்ச்சி அடைந்த குறைவாக ஆன நிலையிலும் பொதுமக்கள் வருகை இல்லாத நிலையில் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஞாயிறு அன்று அசைவ விற்பனை மிகவும் குறைவாக இருந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அசைவ சந்தையில் இறைச்சிகளை வாங்க குவிந்துவருவார்கள். ஆனால் இன்று நெல்பேட்டை அசைவ சந்தை ஆட்களின்றி வெறிச் சோடியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆங்காங்கே உள்ள மீன் சந்தைகளில் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
இதே போன்று மதுரை தெற்குவாசல், மாட்டுத்தாவணி, கரிமேடு, கோரிப்பாளையம், செக்கானூரணி பழங்காநத்தம், மேலூர், ஒத்தக்கடை, அலங்காநல்லூர், உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள அசைவ விற்பன கடைகளில் பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மீன்களின் விலையும் குறைந்த நிலையில் ஆங்காங்கே உள்ள மீன் சந்தைகளில் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். இந்த பகுதிலும் கடந்த நாட்களை விட பாதியளவிற்கு பொதுமக்களை வருகை தருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement