மேலும் அறிய

பட்டாசு வெடிக்க தடை விதித்து அதை நடைமுறைப்படுத்திய கிராம்; பல கிராம மக்கள் பாராட்டு

பட்டாசு வெடிக்க தடை விதித்ததுடன் அதை நடைமுறைப்படுத்திய கிராம மக்களை பல்வேறு கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடிக்க தடை விதித்து கிராம மக்கள் நடைமுறைப்படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஊரில் இனி பட்டாசு வெடிக்கக் கூடாது

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உசிலம்பட்டி அமைந்துள்ளது. இதனால் அதிகமான வாகனங்கள் உசிலம்பட்டியை கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக விழாக் காலங்களில் கூடுதலாக காத்துக் கிடந்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில் விசேஷ நாட்களில் உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் அதிகளவு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

கிராம மக்களே முன் வந்து தடை விதித்துள்ளனர்

இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே பட்டாசு வெடிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இல்ல விழா முதல் துக்க நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வது இப்பகுதி மக்களின் வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் காயங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும் தவிர்க்க முடியாத கலாச்சாரமாக வெடி கலாச்சாரம் மாறிவிட்டது. இந்த சூழலில் உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடிக்க தடை விதித்து கிராம மக்கள் தாங்களே முன்வந்து நடைமுறை படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- தேவையற்ற வார்த்தைகளை பேசும் காவல்துறையினர் - மதுரை போலீஸ் கமிஷனர் வாக்கி டாக்கியில் விடுத்த எச்சரிக்கை

உறுதி எடுத்துக் கொண்ட மாலைப்படி கிராமம்

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் உள்ள 300க்கும் அதிகமான குடும்பங்களில் நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் வெடி வெடிப்பதை மற்ற கிராம பொதுமக்களை போல வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இல்ல விழாவின்போது பட்டாசு வெடித்ததில் அதே ஊரைச் சேர்ந்த ஒச்சம்மாள் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இனிமேல் கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது என முடிவு செய்து கிராம கமிட்டியினர் சார்பில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.,

பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் வெடிக்க தடை

தீர்மானத்தை நிறைவேற்றும் வண்ணம், கிராமத்தின் முக்கிய இடங்களில் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மீறி பட்டாசு வெடித்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க தடை விதித்ததுடன் அதை நடைமுறை படுத்திய கிராம மக்களை பல்வேறு கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

சட்ட திட்ட திட்டங்களை அரசும் அதிகாரிகளும் நிறைவேற்ற நினைத்தாலும் அதனை பொதுமக்கள் நடைமுறைக்கு கொண்டுவருவதே முழு வெற்றியாக அமையும். அந்த வகையில் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள இந்த தீர்மானம் வரவேற்க வேண்டிய விடயமாகும்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Tamil Pudhalvan Scheme: கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டம்; தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Laapataa Ladies: உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் சினிமா? ஆச்சரியமா இருக்கா? இதைப் படிங்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Embed widget