மேலும் அறிய

SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!

2023-இல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மறுசீரமைக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ பணியாளர்களைத் தெரிவு செய்யவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

"மாநில தகுதித்‌ தேர்வு நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ (டிஆர்பி) கொண்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின்‌ பங்களிப்புடன்‌ செட் தேர்வு நடத்தப்படும்‌" என்று உயர் கல்வித்துறை அமைச்சர்‌ கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ 1987ஆம்‌ ஆண்டு உருவாக்கப்பட்டு நாளதுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம்‌ அரசுப்‌ பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும்‌ கல்லூரிக்‌ கல்வி இயக்ககம்‌, தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌, சட்டக்‌ கல்வி இயக்ககம்‌ ஆகியவற்றின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உதவிப்பேராசிரியர்களை தெரிவு செய்யும்‌ அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

முகவாண்மை நிறுவனம்

மேலும்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு நடத்திடும்‌ முகவாண்மை நிறுவனமாக (Nodal Agency) அரசால்‌ நியமிக்கப்பட்டு தேர்வுகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அத்தோடு 2023-இல்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆசிரியர்‌ பணியாளர்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ தெரிவு செய்யவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

1.68 லட்சம் பேர் தெரிவு

1988 முதல்‌ தற்போது வரை பல்வேறு நிலைகளில்‌ பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்வித்‌ துறைகளுக்கு 1,68,657 ஆசிரியர்கள்‌, விரிவுரையாளர்கள்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்கள்‌ இந்த தேர்வு வாரியத்தால்‌ முறையாக தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளனர்‌. இது தவிர கடந்த ஆண்டு முதலமைச்சரின்‌ அறிவிப்புக்கு இணங்க முதலமைச்சர்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்ற மாணவர்களை தேர்வு செய்ய ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தேர்வு நடத்தப்பட்டு 120 மாணவர்கள்‌ முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசால்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ மாநில தகுதித்‌ தேர்வினை (செட்) நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்கு உட்பட்டு உயர் கல்வித்துறை மற்றும்‌ பல்கலைக்கழக பாட வல்லுநர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்களை ஈடுபடுத்திக்‌ கொண்டு மேற்கண்ட தேர்வினை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ வெளிப்படைத்தன்மையுடன்‌ பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ நெறிமுறைகளைப்‌ பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளி முகமை மூலமாகவே நெட் தேர்வு

பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ மூலம்‌ நடத்த வேண்டிய தேசியத்‌ தகுதித்‌ தேர்வு (நெட்) வெளி முகமையான தேசியத்‌ தேர்வு முகமை (என்டிஏ) மூலமே நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாநில தகுதித்‌ தேர்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கொண்டுள்ளது. மேலும்‌, தமிழ்நாடு மின்‌ ஆளுமை நிறுவனத்துடன்‌ இணைத்து இணையவழி தேர்வு நடத்துவதற்கும்‌, நேரடித்‌ தேர்வு நடத்துவதற்கும்‌ போதுமான வசதிகளும்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ உள்ளது.

எனவே, மாநிலத்‌ தகுதித்‌ தேர்வினை (செட்) தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலமே சிறப்பாகவும்‌ முறையாகவும்‌ நடத்தப்படும்‌.’’

இவ்வாறு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி செழியன் தெரிவித்தார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
Embed widget