மேலும் அறிய

புதிய அம்ரித் பாரத் ரயில்: மதுரை வழியாக இயக்கப்படும் அதிநவீன ரயில்.. பயணிகளுக்கு காத்திருக்கும் வசதிகள் என்ன?

இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தகுதி உடையது. குலுங்கல் இல்லாமல் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ரயில் பெட்டி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.

புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை
 
மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) இன்று திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  துவக்கி வைத்தார்.  22 பெட்டிகள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலில், வந்தே பாரத் ரயில் போல இருபுறமும் ரயில் பெட்டிகளுடன் இணைந்த இன்ஜின்கள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தகுதி உடையது. குலுங்கல் இல்லாமல் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ரயில் பெட்டி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதியான இருக்கை மற்றும் படுக்கை வசதி அமைப்புகள், தண்ணீர் பாட்டில், மொபைல் போன் ஆகியவற்றை பாதுகாப்பாக  வைத்திட நவீன வசதிகள், மடித்து வைக்கக் கூடிய சிறிய உணவு மேசை, ஒளி விளக்குகள், பொது அறிவிப்பு வசதி, படுக்கை வசதி பெட்டிகளில் இரவு நேரத்தில் எளிதாக நடக்கும் வகையில்  ரேடியம் விளக்கு ஒளிரும்  பட்டைகள் நடைபாதையில் அமைத்தது ஆகியவை முக்கிய சிறப்பு அம்சங்கள் ஆகும். நவீன துர்நாற்றம் வீசாத கழிப்பறைகள், அவற்றை காற்றாற்றல் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் வசதி போன்றவையும் கூடுதல் சிறப்பம்சங்கள். இரவு நேரத்தில் அவசர தேவைக்கு ரயில் பெட்டிக்கு வெளியே ஒளிரும் விளக்குகளும் உள்ளன. 
 
வழக்கமான சேவை 
 
இந்த ரயிலில் வழக்கமான சேவையில் தாம்பரத்தில் இருந்து புதன்கிழமை (ஜனவரி 28) துவங்குகிறது. அதன்படி தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் வாராந்திர  சேவை ரயில் (16121) தாம்பரத்திலிருந்து புதன்கிழமைகளில் மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் தாம்பரம் அம்ரித் பாரத்  வாராந்திர  சேவை ரயில் (16122) வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். மதுரை ரயில் நிலையத்தில்  அமிரித் பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் வருகையின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ஆர்.சிவா முதுநிலைக்கோட்ட பொறியாளர் வி.சூரியமூர்த்தி, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget