கலைஞர் நூலகம் குறித்து அதிமுக எம்எல்ஏ விமர்சனம் - எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி
“கண்ணாடி பார்த்துதான் தலை சீவுகின்றோம், அதுபோல தான் புத்தக வாசிப்பும்.. தற்போதைய டிஜிட்டல் காலத்தில் தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும்” - சு.வெங்கடேசன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
" இது கம்யூட்டர் காலம் அனைவரும் செல்போனிலும், கூகுல் போன்றவற்றில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றனர். கலைஞர் நூலக திட்டம் எதற்கும் பயன்படாத திட்டம்" என மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் தெரிவித்துள்ளார்.@PPeriyapullan | @SRajaJourno | @mkstalin | #melur | @SuVe4Madurai pic.twitter.com/fQbjdUmz5s
— Arunchinna (@iamarunchinna) June 18, 2022
#கலைஞர் நூலகம் வேண்டாம் என சொல்லிய அ.தி.மு.க எம்.எல்.ஏ., பெரியபுள்ளானுக்கு சு.வெ பதில் !@PPeriyapullan | @SRajaJourno
— Arunchinna (@iamarunchinna) June 21, 2022
| @SuVe4Madurai | @TRBRajaa | @mkstalin | @Rameshtamil10 | #melur https://t.co/yaYZXDA3IJ pic.twitter.com/zOSNsS9Gjz
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்