மேலும் அறிய
Madurai Power Shutdown: மேலூரில் நாளை (26.11.2024) எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் இதோ
Madurai Power Shutdown 26.11.24 நாளை மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலூரில் மின் தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் மேலூரில் பகுதியில் (26.11.2024) நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மதுரை கிழக்கு செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு
மின்விநியோகம் செய்யும் பகுதியில் பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். ”26.11.2024 (செவ்வாய் கிழமை) நாளை 110/11 KV தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றையதினம் காலை 9:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை கீழ்கண்ட ஊர்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:
கீழையூர், அட்டப்பட்டி, கொடுக்கம்பட்டி, கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்” மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
மேலும் செய்திகள் படிக்க இங்கெ கிளிக் செய்யவும் - NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement