மேலும் அறிய

Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்

இந்த எலக்ட்ரிக் பிளையிங் டாக்சியில் மொத்தம் 3 பேர் அமரக்கூடிய இடவசதி உள்ளது. அதாவது, ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் இதில் சௌகரியமாகப் பயணிக்க முடியும்.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் ஃப்ளையிங் டாக்சி, அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு, ரேஞ்ச் மற்றும் கட்டண விவரங்கள் என்ன? காணலாம்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பிளையிங் டாக்சியை ஐஐடி சென்னை டிஸ்கவரி வளாகத்தில் தொடங்கப்பட்ட தி இ-பிளேன் கம்பெனி (The ePlane Company) உருவாக்கி வருகிறது. தற்போது இதன் முன்மாதிரி உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. e200X என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்ஸி, நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிளையிங் டாக்சியின் முழுமையான சிறப்பம்சங்கள் என்ன என்று காணலாம்.

வடிவமைப்பு

இது eVTOL  எனப்படும் எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 800 வோல்ட் ஹை வோல்டேஜ் எலக்ட்ரிக் பவர்ட்ரெய்ன், சார்ஜிங்கை வேகமாக்குகிறது.

இந்த டாக்ஸியால் ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கவும் முடியும் என்பதால் இதற்கு விமானங்களைப் போல நீண்ட ஓடுபாதை தேவையில்லை. இது பெரு நகரங்களின் நெரிசல் போக்குவரத்தில் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

 

செங்குத்தாக மேலே எழும்ப ரோட்டர்களும், முன்னோக்கிப் பறக்க ஏரோடைனமிக் இறக்கைகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வடிவமைப்பு மிகவும் கச்சிதமானது. ஒரு காரை நிறுத்துவதற்குத் தேவையான அளவிலான சிறிய பார்க்கிங் இடமே இதனை நிறுத்தப் போதுமானது.

நவீன கார்பன் ஃபைபர் உபகரணங்களால் தயார் செய்யப்பட்ட இந்த டாக்ஸியின் ஒட்டுமொத்த எடை சுமார் 200 கிலோ மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பயணிகள் எத்தனை பேர் பயணிக்கலாம்?

இந்த எலக்ட்ரிக் பிளையிங் டாக்சியில் மொத்தம் 3 பேர் அமரக்கூடிய இடவசதி உள்ளது. அதாவது, ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் இதில் சௌகரியமாகப் பயணிக்க முடியும்.

ரேஞ்ச்

இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 110 கிலோமீட்டர் தூரம் வரை இடைவிடாமல் பறக்கும் ரேஞ்ச் இதற்கு உண்டு. இது மணிக்கு 160 கி.மீ முதல் அதிகபட்சம் 200 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. இதன் மூலம், சாலையில் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்ளும் பயணத்தை வெறும் 10 முதல் 14 நிமிடங்களில் விரைவாகச் சென்றடைய முடியும்.

விலை, பயணக் கட்டணம்

இதன் விலை அல்லது கட்டண விவரம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த வாகனத்திற்கான பேட்டரி சோதனை மற்றும் போக்குவரத்து இயக்குநரகத்தின் ஒப்புதல் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இது வர்த்தக ரீதியாக மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.இதற்கு 2027ஆம் ஆண்டு இறுதி வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
Cheapset 9 Seater: நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்
585 சிசி எஞ்ஜின்.. வரப்போது TVS-ன் அசத்தலான ஆஃப் ரோட் பைக் Norton Atlas - அப்படி என்ன இருக்குது?
585 சிசி எஞ்ஜின்.. வரப்போது TVS-ன் அசத்தலான ஆஃப் ரோட் பைக் Norton Atlas - அப்படி என்ன இருக்குது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
TN Budget 2026: ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
CV Shanmugam : சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
Embed widget