மேலும் அறிய

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா: சுந்தரேஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு பூஜை!

மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வீணை வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான வீணை இசைக்கலைஞர்கள்  கலந்துகொண்டு சுவாமி அம்மனையும் வரவேற்று வழிபாடு செய்யும் விதமாக வீணையை இசைத்தனர்.

மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு சித்திரை வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம்வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அம்மன் சன்னதி வீதியில் உள்ள கைலாசா மடத்தின் முன்பாக சுவாமி அம்மனுக்கும்  தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு. புதுமண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வைகாசி வசந்த உற்சவ விழா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் வைகாசி மாதத்தை முன்னிட்டு நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா  நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ள இவ்விழாவின் முதல் நாள் நிகழ்வாக கோயிலில் இருந்து சுந்தேரசுவரர் பிரியாவிடை சமேதராகவும், மினாட்சியம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளியபடி பஞ்ச மூர்த்திகள் முன்னே வர அம்மன் சன்னதி வீதி வழியாக புதுமண்டபத்திற்கு புறப்பாடாகினர். அப்போது அம்மன் சன்னதி வீதியில் அமைந்துள்ள நித்யானந்தாவின் கைலாசா மடத்தின் முன்பாக அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கைலாசா மட பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக அம்மன் சன்னதியில் அம்மனும் சுவாமியும் சிம்மாசனத்தில் வந்தபோது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுமண்டபத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரர்

இதனைத் தொடர்ந்து புதுமண்டபத்திற்கு வந்தடைந்த சுவாமிக்கும் அம்மனுக்கும் வரவேற்பு அளிக்கும் விதமாக கோயில் கண்காணிப்பாளர் மற்றும் கணக்காளர் சுவாமி - அம்மன் முன்பாக வணங்கி வரவேற்கும் வைபவம் நடத்தப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புது மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மூன்று முறை வலம் வந்தனர். அப்போது புதுமண்டபத்தில் சுற்றி நின்று ஏரளாமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புது மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது வீணை வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான வீணை இசைக்கலைஞர்கள்  கலந்துகொண்டு சுவாமி அம்மனையும் வரவேற்று வழிபாடு செய்யும் விதமாக வீணை இசை வாசித்தனர்.

சித்திரை வீதியில் உலா

வைகாசி வசந்த உற்சவ விழாவினை முன்னிட்டு புதுமண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கரின் சிலைக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர்  புதுமண்டபத்தில் இருந்து பஞ்ச மூா்த்திகளுடன்  சுவாமியும் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது சித்திரை வீதிகளில் ஏராளமான பக்தர்கள் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவம் விழாவினை முன்னிட்டு நேற்று தொடங்கி 10 நாட்கள் வரை திருக்கோயில் சாா்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்பது குறிப்பிடதக்கது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை கருத்தில்கொண்டு பணிசெய்ய வேண்டும் - நீதிபதி கருத்து

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget