மேலும் அறிய
மதுரையில் பளிச்சென மாறும் இந்த இடம்.. தூய்மை இல்லை என்றால் கியூ.ஆர் மூலம் புகார் கொடுக்கலாம்
தூய்மைப்பணி இல்லாவிட்டால், கியூ.ஆர் கோடு மூலம் மாநகராட்சி ஆணையருக்கு நேரடியாக புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி கழிப்பறைகள்
Source : whats app
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கு பிறகு பளிச்சென மாறிய மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய கழிப்பறைகள்.
மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்துநிலையம்
மதுரையில் பெரியார் பேருந்துநிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் முக்கியதுவம் வாய்ந்தவை. குறிப்பாக அதிகளவு வெளியூர் பேருந்துகள் மாட்டுத்தாவணியில் இருந்து புறப்படுகிறது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் மாட்டுத்தாவணி வந்து செல்கின்றனர். சென்னை முதல் தூத்துக்குடி வரை பல்வேறு நகரங்களுக்கும் தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனால் தென்மாவட்ட பயணிகளுக்கு மாட்டுத்தாவணி மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் தூய்மை குறைபாடக உள்ளது என புகார் எழுந்த சூழலில் தற்போது அதன் நிலை மாறிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
”அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் மதுரை வந்தார். அப்போது, திடீரென மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர், கழிவறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் குறித்து மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் விசாரித்து வரும் அவர் அதனை தூய்மையாய் பராமரிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
புகார் அளிக்க கியூ.ஆர் கோடு
இதனடையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய கழிப்பறைகள் பளிச்சென மாறி வருகிறது. தூய்மைப்பணி இல்லாவிட்டால், கியூ.ஆர் கோடு மூலம் மாநகராட்சி ஆணையருக்கு நேரடியாக புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள், குப்பையைத் திறந்தவெளியில் வீசுவதைத் தடுக்க, பேருந்து நிலைய வளாகத்தில் 40 அடிக்கு ஓர் இடத்தில் ஒரு குப்பைத் ஓர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க, பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் செடிகள் வைத்து அதற்குப் பாதுகாப்பாக கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும் தூய்மைப் பணி
மேலும் பேருந்து நிலையச் சுற்றுச்சுவர் அருகே குளோரின், பிளீச்சிங் பொடி, லெமன் கிராஸ் எண்ணெய் தெளிக்கப்படுகிறது. திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களை விசில் ஊதி எச்சரித்து விரட்ட 2 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதோடு காலையில் இரண்டு வேளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
கல்வி
கிரிக்கெட்





















