மேலும் அறிய

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சரக்கு வானங்களுக்கு இனி Entry Fee இல்லை - முழு விவரம் !

சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் பணியில் ஈடுபடும் லாரிகளிடம் எவ்விதமான வாகன நிறுத்தக் கட்டணமும் (Entry fee) வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. - மதுரை எம்.பி.

கூடல் நகர் இரயில் நிலையத்தில் சரக்கு வாகன நிறுத்தக் கட்டணம் ரத்து: எனது கோரிக்கையை ஏற்ற தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு நன்றி.
 
மதுரை எம்.பி - சு. வெங்கடேசன் எம்.பி - வெளியிட்ட செய்தி குறிப்பு
 
கூடல் நகர் இரயில் நிலையத்தில் சரக்கு வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது...," தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் மற்றும் பிற வாடிக்கையாளர்களிடமிருந்து எனக்கு வந்துள்ள புகாரின்படி, கூடல் நகர் பார்சல் அலுவலகத்தில் பார்சல்களைப் பதிவு செய்ய மற்றும் பெற்றுக்கொள்ள வரும் வாகனங்களிடம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்க இரயில்வே நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களிடம் மாதம் குறைந்தபட்சம் ரூ. 4,500 வாகன நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மீது பெரும் சுமையைச் சுமத்துவதோடு, சில நேரங்களில் அவர்கள் செலுத்தும் இரயில்வே முன்பதிவுக் கட்டணத்தை விடவும் இது அதிகமாக உள்ளது.
 
இரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும்.
 
வணிக நலன் கருதி வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது இரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். இத்தகைய கட்டணங்கள் வாடிக்கையாளர்களைப் பிற இரயில் நிலையங்களுக்கும் அல்லது பிற போக்குவரத்து முறைகளுக்கும் மாறத் தூண்டும். சரக்கு முன்பதிவு செய்யும் முகமைகள், தங்கள் வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாகன நிறுத்தத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஏற்கனவே இரயில்வே துறை தனது பார்சல் மற்றும் சரக்கு வணிகத்தை சாலைப் போக்குவரத்திடம் இழந்து வரும் சூழலில், இந்த வாகன நிறுத்தக் கட்டணம் வாடிக்கையாளர்களை ஊக்கமிழக்கச் செய்கிறது. எனவே, வணிக மற்றும் வாடிக்கையாளர் நலன் கருதி, இந்த வாகன நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாடிக்கையாளர்கள் இரயில்வே வளாகத்திற்குள் கட்டணமின்றி வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.”
 
தெற்கு இரயில்வே நிர்வாகம்
 
எனது இந்தக் கடிதத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே நிர்வாகம், ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரயில் பெட்டிகள் (Rake) வந்து நிற்கும் சமயத்தில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் பணியில் ஈடுபடும் லாரிகளிடம் எவ்விதமான வாகன நிறுத்தக் கட்டணமும் (Entry fee) வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget