மேலும் அறிய

தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?

பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம், தொகுப்பூதிய பணிக்காலம் உள்ளிட்ட 18 வகையான கோரிக்கைகளை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய பணிக்காலம் என்பன உள்ளிட்ட 18 வகையான கோரிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

என்னென்ன கோரிக்கைகள்?

1.பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் கடந்த 01.01.2026 முதல் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அரசாணையில் 1.1.2026க்கு முன்பு புதிய ஓய்வு திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை முழுமையான அரசாணை வெளியிடப்படாததால் 1.1.2026க்கு முன்பும் பின்பும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கிறோம்

2.தொகுப்பூதிய பணிக்காலம்

2004, 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய பணிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்டு 16-2006 முதல் காலமுறை ஊதியத்தில் கொண்டுவரப் பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுடைய தொகுப்பூதிய பணிக்காலம் பணி முறிவு காலமாகவே உள்ளது. தொகுப்பூதிய பணிக்காலத்திலும் முழுமையான பணி ஆற்றியதை கருத்தில் கொண்டு தொகுப்பூதிய பணிக்காலத்தை பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலைக்கு கருத்தில் கொள்ளும் வகையில் தொகுப்பூதிய பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

3.உயர் கல்விக்கான ஊக்க ஊதியம்

அரசாணை நிலை எண் 37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (அவி. ஐஏ) த்துறை நாள் 10.3.2020 மற்றும் அரசாணை நிலை எண் 116 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த(அவி. ஐஏ) த்துறை ன்படி தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் முறை நிறுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. 10.3.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றர்வகளின் பட்டியல் துறை வாரியாக கோரப்பட்டு அவர்களுக்கு 31.03.2021 முன்பாக ஊக்க ஊதிய ஆணை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிற துறைகளில் 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் 10.03.2020 க்கு உயர்கல்வி முடித்தவர்களுக்கும் இன்றுவரை ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு விரைவில் ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே உயர்கல்வியை முடித்து ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணப்பலன்கள் பெறாமல் காத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கான ஊக்க ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

  1. அரசாணை 243 எவ்வித பாதிப்பும் இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் நீண்ட கால கோரிக்கையின் படி வட்டார முன்னுரிமை ரத்து செய்யப்பட்டு மாநில முன்னுரிமையிலான அரசாணை 243 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும். இதனால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் முன்னுரிமை பாதிப்பின்றி, இடமாறுதல் பெறவும் மாநில முழுவதும் ஒரே மாதிரியான பதவி உயர்வு வாய்ப்புகளும் பெற வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த அரசாணை எவ்வித பாதிப்பும் இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும் என தங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

  1. அலகு மாறுதல் மற்றும் பணிஈர்ப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு TRB தர எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டும் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் மூலமும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமை இன்றி இளையோராக உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு வந்த நாள் தான் பணி மூப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு (முதுகலை ஆசிரியர் பதவி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 விதி 40(2),ன் படி (ஒரு பதவியில் பணிமூப்பு நிர்ணயம் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையிலான நியமன முறை இருப்பின் (நேரடி நியமனம், பதவி உயர்வு, கருணை அடிப்படை, துறை மாறுதல் மற்றும் பிற) அப்பதவியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்) வழக்கு எண்கள் W.P.NO.28133/2017 தீர்ப்பு ஆணையின்படி ஈர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு TRB தர எண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும்.

6.போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் கடந்த ஆட்சி காலத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக ஆசிரியர்களுக்கு பின்வரும் நாட்களுக்குரிய ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இந்தப் போராட்ட நாட்கள் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. போராட்ட நாட்கள் முறைப்படுத்தப்படாத காரணத்தினால் தேர்வு நிலை சிறப்பு நிலை மற்றும் பதவி உயர்வுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போராட்டம் சார்ந்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டங்கள் பணி வரன்முறை செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 4.10.2018, 9.07.2025, 28-03-2022, 29-03-2022, 18.11.2025 ஆகிய வேலை நிறுத்த காலத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டுள்ள போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

7.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக அப்போதைய நடைமுறைப்படி முறையாக பணியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என்ற சட்ட திருத்தத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதுடன் இந்திய நாடாளுமன்றத்திலும் அவ்வகையான திருத்தத்தை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

8.தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பினை பெற்று தரும் வகையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி சிறப்பு பணி விதிகளில் (SPECIAL RULES) திருத்தம் செய்து முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் 50 சதவீத நேரடி நியமனத்தில் 8% தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி நேரடி நியமனத்தில் செல்லும் போது ஊதிய இழப்பு ஏற்படாத வகையில் உரிய திருத்தங்கள் செய்து ஊதியபாதுகாப்புடன் (Pay protection) முதுகலை ஆசிரியர் பணியினை வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

9.மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதி செய்திட கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

10.EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட AI பணியிடங்களைப் போல் பள்ளிக்கல்வித்துறையிலும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் AI பணியிடங்களை நியமனம் செய்து ஆசிரியர்களை கற்பித்தல் தவிர பிற அனைத்து வகையான பணிகளில் இருந்தும் முழுமையாக விடுவித்து கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.

11.தொடக்கக் கல்வித் துறையில் 100% பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

12.பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 239 படி தொடக்கக் கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் 100 சதவீதமும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது தமிழக அரசின் எந்த துறைகளிலும் இதுபோன்ற 100 சதவீதம் பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித்துறையில் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ஒன்றிய அளவில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் முழுவதும் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படுவதால், பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலில் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, தொடக்கக்கல்வித்துறையில் 50 சதவீதம் பதவி உயர்வு 50 சதவீதம் நேரடி நியமனம் செய்திட வேண்டும்.

13 பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட வேண்டும்

2021ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு நடைபெறாத நிலையில், கடந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெற்றது. இந்த ஆண்டும் பதவி உயர்வு நடைபெறாததால் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெற உள்ளது. பதவி உயர்வு நடைபெற்றால் ஆயிரக்கணக்கான பட்டதாரி காலி பணியிடங்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

14 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

தற்போது கூடுதல் மாணவர்கள் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 175 மாணவர்கள் அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 35 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு மேல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கிட பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

15.கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக மாற்றம் செய்தது இப்போதும் தொடர்கிறது இதனை 2. 30 மணி நேரமாக குறைக்க வேண்டும். மேலும் விடைத்தாள் திருத்தும் போது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைக் கல்வி போல 12 விடைத்தாள்களாக குறைத்து வழங்க வேண்டும். அறைக்கண்காணிப்பாளூக்கும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான உழைப்பூதியத்தையும் உயர்த்தி வழங்கவேண்டும்.

16.மாணவர்களின் கற்றல் மேம்பாடு கருதி ஆசிரியர் மாணவர் விகிதத்தினை 6 முதல் 8 வகுப்புகளுக்கு 1 20 எனவும் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு 1: 25 எனவும் நிர்ணயம் செய்திட வேண்டுகிறோம். பணியிட நிர்ணயத்தின் போது ஓர் ஆசிரியருக்கு 20 பாட நிர்ணயம் செய்திட வேளைகளை கருத்தில் கொண்டு பணியிடங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

17.பட்டதாரி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்யும் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்திட வேண்டும்.

18.தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் துணை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget