மேலும் அறிய

ராமநாதபுரம்: 192 ஆண்டு பழமையான ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த, 192 ஆண்டுகள் பழமையான எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெருநாழியில் ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு.

பழமையான எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - பெருநாழி அருகில் துத்திநத்தம் வாலசுப்பிரமணியபுரத்தில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த, 192 ஆண்டுகள் பழமையான எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், எட்டையபுரம் சமஸ்தானத்து ஊர்களின் எல்லைப் பிரச்னைக்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மதுரை பிரின்சுபல் கலெக்டர் கொடுத்த தீர்ப்பு, எல்லைக்கல் கல்வெட்டாக மக்கள் வழிபாட்டில் இருப்பதால் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.       
 
ஸ்தாபித்த எல்கைக்கல்
 
 பெருநாழி அருகில் துத்திநத்தம் வாலசுப்பிரமணியபுரத்தின் வடமேற்கில் 3 கி.மீ தொலைவில் ஐந்து ஊருணிகளின் அருகில் விவசாயக் காட்டில் 12 அடி உயர கருங்கல் தூணின் உச்சியில் கல்வெட்டு இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் விஜயராமு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர், வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தார். சௌந்தரராஜன், செல்லம் ஆகியோர் உதவியுடன் கல்வெட்டைப் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தபின் வே.ராஜகுரு கூறியதாவது...,"கி.பி.1834-ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போது, ராமநாதபுரம் சேகரம் பெருநாழி கிராமத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சேகரம் மாவலோடை, கூதலபுரம், சின்னூர் கிராமங்களுக்கும் இருந்த எல்லை பிரச்னையில் அப்போதைய மதுரை பிரின்சுபல் கலெக்டர் ஜான் பிளாகி பான்துரை, கொடுத்த தீர்ப்பு, எல்லைக்கல்லில் கல்வெட்டாக வெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெருநாழியின் மேற்கெல்கை மால் ஐந்து ஊருணிகளுக்கு வடக்கு, பெருநாழி மேற்கெல்கைக்கு பரளச்சி கிழக்கெல்கை, பூலாங்கால், செங்குளம் தெற்கெல்கை இதற்காக ஸ்தாபித்த எல்கைக்கல் என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
 
கிரந்த எழுத்துகள்
 
25 வரிகள் உள்ள கல்வெட்டில், சாலிவாகன சக ஆண்டு 1757, தமிழ் ஆண்டு ஜய வருடம் ஆவணி 9, ஆங்கில ஆண்டு 1834, ஆகஸ்டு மாதம் 23 ஆகிய மூன்று ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் எண்கள், தமிழ் கூட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில் வெட்டாமல் விடுபட்ட சொற்களை அதன் மேல் சிறியதாக வெட்டியுள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் அப்போதைய மதுரை பிரின்சுபல் கலெக்டர் ஜான் பிளாகி பான் துரை 1834 முதல் 1847 வரை பதவியில் இருந்தவர். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு வெட்டிய காலத்தில் துத்திநத்தம் வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட இதன் அருகில் உள்ள பல ஊர்கள் உருவாகி இருக்கவில்லை. கல்வெட்டு 192 ஆண்டுகள் பழமையானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget