மேலும் அறிய
விஜய் அண்ணாவின் சிங்கப்பெண் திட்டம்: கவர்ச்சியா? கவலை தீர்க்குமா? - ஆர்.பி.உதயகுமார் !
தமிழகத்தில் உள்ள 25000 பெண் போலீசாரை சிங்க பெண்கள் திட்டத்தில் இணைத்தால் கூட 4 கோடி பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது. - ஆர்.பி.உதயகுமார்.

சிங்கப் பெண் திட்டம்
Source : whatsapp
விஜய் அண்ணா அறிவித்த சிங்கப்பெண் திட்டம் கவர்ச்சி திட்டமா? சிங்கப்பெண்களின் கவலையை தீர்க்கும் திட்டமா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி
ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ
"இன்றைக்கு பக்கம் பக்கமாக விஜய் அண்ணாவின் அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை சந்தோசமாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. குற்றங்கள் குறைக்குமா? இந்த சிங்கப்படை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்னும் தொடங்கவே இல்லை அதற்குள்ளேயே ஒப்பாரி என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவலர்களுடைய எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரம் அதில் பெண் போலீசார் எண்ணிக்கை 25,000 மட்டுமே. இன்றைக்கு தமிழக மக்கள் தொகை சுமார் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதனை 4 கோடிக்கு மேலே பெண்கள் இருக்கிறார்கள். மொத்தமே 25000 பெண் போலீசாரை சிங்க பெண்கள் திட்டத்தில் இணைத்தால் கூட 4 கோடி பெண்களுக்கு அவர்களால் பாதுகாப்பு தர முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.
சிங்கப்படை சிறப்பு அதிரடி படைக்கு ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? புதிதாக ஏதாவது கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதா? இந்த திட்டத்திற்கான புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளதா? புதிதாக இந்த திட்டத்திற்கு ஏதேனும் நியமனம் நடந்துள்ளதா? ஏற்கனவே வருடத்திற்கு வருடம் மக்கள் தொகை ஏறிக்கொண்டே போகிற நிலையில் காவலர்கள் எண்ணிக்கையை கூட்டப்படாமலேயே, காவல் நிலையங்களில் இருந்து காவலர்களை பிரித்தெடுத்து புது படையை அமைத்ததால் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் என்ன நிலை ஆகும். இது கவர்ச்சி திட்டமா சிங்கப்பெண்களின் கவலை தீர்க்கும் திட்டமா விஜய் அண்ணா என்று சிங்கப்பெண்கள் கேள்வி கேட்கிறார்கள் ஆகவே பேப்பரிலேயே விளம்பரம் செய்துவிட்டு கோப்பிலே கையெழுத்துயிட்டு அந்தத் திட்டத்தை செயல்படுத்துகிற போது நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு , புதிய நியமனங்கள் அதற்குரிய வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுரைகள் என்பதெல்லாம் செயல்படுத்தினால் தான் ஒரு திட்டத்தை முழுமையாக மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க முடியும்.
மக்களுக்கு தெளிவுபடுத்த முன் வருவாரா?
மக்கள் பாதுகாப்பிற்கு ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா எடப்பாடி ஆகியோர் அரசு பெண்கள் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய திட்டங்களை முழுமையாக இந்த அரசு செயல்படுமா அல்லது அதை கிடப்பில் போட்டு விடுமா பெண்கள் பாதுகாப்புக்காக அம்மா முக்கியத்துவம் கொடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா? எடப்பாடியார் காலத்திலே தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் இப்போது விஜய் அண்ணா அரசிலே தொடருமா? ஆகவே இது கவர்ச்சி திட்டமா? சிங்கப்பெண்களின் கவலை போக்கும் திட்டமா என்பதை விஷயத்தை மாலையிலே துவங்கி வைக்கிற போது மக்களுக்கு தெளிவுபடுத்த முன் வருவாரா?
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது
எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டத்தில் மற்றும் அதிகாரிகளிடம் விரிவாக ஆராய்ந்து அறிந்து திட்டத்தை அறிவிப்பார்கள். அது உதாரணம் தான் குடிமராமத்து திட்டம் இன்றைக்கும் அந்த திட்டம் உலகளாவிய புகழை பெற்று ஒரு வழிகாட்டுகிற திட்டமாக இருக்கிறது. அதேபோல புரட்சித்தலைவி அம்மாவின் மடிக்கணினி திட்டம் இன்றைக்கும் உலகளாவிய வழிகாட்டுதல் திட்டமாக இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறிவித்த சத்துணவு திட்டமும் இன்றைக்கும் உலகளாவிய வழிகாட்டுதலும் திட்டமாக இருக்கிறது. விஜய் அண்ணா அறிவித்த இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கவர்ச்சி திட்டமா? சிங்கப்பெண்களின் கவலையை தீர்க்கும் திட்டமா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம். அதுவரை நம்முடைய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என கூறினார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















