மேலும் அறிய
Madurai ; கல்வி போல் தனித்திறமையும் முக்கியம்.. மாணவர்களிடம் அன்பில் மகேஸ் உற்சாக பேச்சு !
உலகம் உங்கள் கையில் இருந்தாலும், அதை தாண்டியும் ஒரு உலகம் இருக்கு - அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு: கல்வி, திறமை இரண்டும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
Source : whatsapp
படிப்பில் கவனம் செலுத்துவது போன்று மாணவ, மாணவிகள் தனித்திறனிலும் கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்ளுங்கள் - என உசிலம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.
சாரண சாரணியர் இயக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...,” திராவிட மாடல் என்று சொல்லும் போது கட்சியால், கட்சியின் கொடியால், கொள்கைகளால் எப்படி வேண்டுமானாலும் மாறுபட்டிருக்கலாம், ஆனால் இங்கு படிக்கும் பிள்ளைகள் நமது பிள்ளைகள் நன்றாக படித்து வந்தால் தான் நமக்கு பெருமை.
ஆசை படுவதை எல்லோராலும் செய்து விட முடியாது
சாரண சாரணியர் இயக்கத்தில் நம்மை உறுப்பினராக இணைத்திருப்பது, தனி மனிதரின் ஒழுக்கம் சார்ந்தது. நாம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும், ஒரு இயற்கை பேரிடர் என்றால் மற்றவர்களுக்கு எப்படி உதவிக்கரமாக இருக்க போகிறோம் என்று பயிற்சியில் சொல்லி வருகிறோம். அதனால் தான் இந்த இயக்கத்திற்காக ஒரு தலைமையிடம், அன்னல் காந்தியடிகள் வந்து போன இடத்தில் நமக்கான தலைமையிடத்தை அமைக்க 9 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். முதல்வர் என்பது நமது இயக்கத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை. நம்மை உறுதிபடுத்தி காட்டினால் நமக்கு கை கொடுக்கும் முதல் ஆளாக நமது முதல்வர் இருக்கிறார்., அதனால் தான் ஆட்சி மாற்றம் வந்த பின்பு இரண்டரை லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கையை இன்று 10 லட்சத்தை தாண்டியுள்ளோம்., என்பது தான் நம்பிக்கை. படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள், இந்த வயது நம்மை அறியாமல் பல்வேறு விதமான கவனச்சிதறலுக்கு நம்மை ஆளாக்க தான் செய்யும். உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது., இது தான் உலகம் என்று தயவு செய்து மூழ்கி போய்விடாதீர்கள். இதை தாண்டி நமக்கான வெளி உலகம் இருக்கிறது, நம்முடைய சமுதாயம் இருக்கிறது, இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை படுவதை எல்லோராலும் செய்து விட முடியாது, நம்மை போன்ற சாரணர் இயக்கம், ஜேஆர்சி, என்சிசி இதை போன்ற அமைப்புகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் முடியும்.
விளையாட்டும் முக்கியம்
துணை முதல்வர் சொல்லிக் கொண்டே இருப்பது போல வெறும் வகுப்பறைக்கு மட்டும் போய் வந்தால் வெறும் எழுத்துக்களை மட்டுமே கற்க முடியும்., விளையாட்டு வாழ்க்கைக்கான பாடத்தை சொல்லி தரும். விளையாட்டு மைதானத்திற்கு வாருங்கள் சமுதாயத்திற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை விதைக்க வேண்டும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















