மேலும் அறிய
அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுத்து பாராட்டு... எதற்கு தெரியுமா?
அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த நடத்துனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது
Source : whats app
பேருந்துகளில் பயணம் செய்யும்பொழுது Digital Transaction பணபரிவர்த்தனை செய்து எளிதாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும்படி மேலாண் இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
வாழ்க்கை முறையில் டிஜிட்டல் அவசியம்
தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் டிஜிட்டல் ஒரு அங்கமாகும். வீடு முதல் அலுவலகம் வரையிலும் டிஜிட்டல் பரவிக்கிடக்கிறது. அதற்கு இடையில் நாம் எங்கு சென்றாலும் டிஜிட்டலை பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இந்த சூழலில் அரசுப் பேருந்துகளில் கூட தற்போது டிஜிட்டல் பரிவர்த்தை கொண்டு வரப்பட்டுவிட்டது. இதன் மூலம் சில்லரை பிரச்னைகள் தவிர்க்க முடிகிறது. பயணிகள் மற்றும் நடத்துனர் இடையே ஏற்படும் சிரமங்கள் குறைகிறது. இந்த நிலையில் அரசுப் பேருந்தில் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த நடத்துனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.
அரசுப் பேருந்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டத்தில் பயன்படுத்தப்படும் SBI POS மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம், கடந்த மே - 2025 மாதத்தில் பயணச்சீட்டு கட்டண வசூலுக்காக அதிக பணமில்லா பரிவர்த்தனைகளை (Digital Payment - UPI / Card) செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஒரு நடத்துநர் தேர்வு செய்யப்பட்டு நடத்துநர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை கோட்டத்தின் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் இன்று பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். இதில் பொது மேலாளார் மணியும் கலந்துகொண்டார்.
ஊக்கப்பரிசு பெற்ற நபர்கள்
மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகளவு பயன்படுத்திய நபர்களில் “மதுரை மண்டலத்தில் நகர் கிளையில் நடத்துனர் K.முத்துவேலும், மதுரை புறநகர் கிளையில் நடத்துனர் R.சரவனனும், திண்டுக்கல் மண்டலத்தில் கிளை-1 நடத்துனர் P.சுருளிராஜனும், திண்டுக்கல் மண்டலம் குமுளி கிளையில் நடத்துனர் L. பிஸ்வஜித்தும், விருதுநகர் மண்டலத்தில் சிவகாசி கிளையில் நடத்துனர்கள் S.R.T.மயில்ராஜ் மற்றும் S. பாக்கியராஜ் ஆகியோர் பரிசினை பெற்றனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்ட பேருந்துகளில் பயணம் செய்யும்பொழுது Digital Transaction பணபரிவர்த்தனை செய்து எளிதாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும்படி மேலாண் இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















