மேலும் அறிய

சீமான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்  அடிப்படையில்  விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கே.கே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு.

தந்தை பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது நீதிபதி கருத்து. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20 ஆம்  தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவு.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், "நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் (09/01/25) செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் கல்வி அறிவில் முன்னேற்றத்திற்காகவும் பெரும் பாடுபட்டவர் தந்தை பெரியார். ஆனால் பெண்கள் மத்தியில் தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துக்களை திணிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அடிப்படை ஆதாரம் இன்றி சீமான் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆகவே சீமான் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

கிரிமினல் நடவடிக்கை

ஆகவே எனது புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு  நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மகேந்திரபதி, பதுருஸ் ஜமான் ஆகியோர் தந்தை பெரியார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்கள் உரிமை பெண் கல்வி என பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாடு பட்ட தந்தை பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் பேசி வருகிறார் இவர் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டனர்.

இதை பதிவு செய்த நீதிபதி...,” சீமான் தெரிவித்த உள்ள கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவாகரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் துறை மனுதாரரின் புகார் மனுவை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20 தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பெரியார் மீது ஆதாரமில்லாத, அவதூறுகளை சங்கப்பரிவார் பரப்புகிறது - திருமா காட்டம்

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget