மேலும் அறிய
Advertisement
நில விவகாரத்தில் உறவினர்களுடன் பிரச்னை - கணவரின் மர்ம மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக உறவினர் ஒருவர் அவருடன் சண்டையிட்டார். இதுகுறித்து என் கணவர் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் கணவர் சாவில் மர்மம் உள்ளது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நீலாவதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என் கணவர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த அக்டோபர் 29ல் காணாமல் போனார். இருங்கலூர் கிணறு அருகே அவரது உடல் கிடந்தது. சமயபுரம் போலீசார் சந்தேக மரணமாக என வழக்குப்பதிவு செய்துள்ளனர். இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக உறவினர் ஒருவர் அவருடன் சண்டையிட்டார். இதுகுறித்து என் கணவர் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் கணவர் சாவில் மர்மம் உள்ளது.எனவே, என் கணவர் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.’’ என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரரின் கணவர் 2021 அக்டோபர் 29ஆம் தேதி இரவு 7 மணி அளவில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக தெரியவந்து ரோந்து பணிக்கு சென்றோம் காவல்துறையினரை பார்த்ததும் அந்த இடத்தைவிட்டு மனுதாரரின் கணவர் தப்பிச்சென்றார் அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து இறந்திருப்பார் மேலும் அவரது இருசக்கரவாகனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், எனது கணவர் 2021 அக்டோபர் 29ஆம் தேதி இறந்தார். இறந்த இடத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை நீதிமன்றத்தில் 2022 மார்ச் 4-ஆம் தேதி 5 மாதம் பின்பே ஆஜர்படுத்தினர். எனவே, காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.இதனையடுத்து நீதிபதி, சமயபுரம் போலீசிலிருந்து இந்த வழக்கின் விசாரணை திருச்சி சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடித்து விரைந்து வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion