மேலும் அறிய
Advertisement
காவலர்கள் கோபம் வந்தால் தாக்குவார்களா? - ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நீதிபதி கேள்வி
வழக்கு தொடர்பான ஆவணங்கள், உடற்கூராய்வு அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு.
வேன் ஓட்டுநர் முருகன்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மீனா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் முருகன். வேன் ஓட்டுனரான முருகன் கடந்த 8 ஆம் தேதி அச்சம்பட்டியில் உள்ள மக்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். முப்பிடாதியம்மன் கோயில் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள ஆட்டோ மீது வேன் மோதியதாம். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள் முருகனை தாக்கியதில் மயக்கமடைந்த முருகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் அடித்ததால்தான் முருகன் இறந்தார் எனக்கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
இந்நிலையில் மருத்துவமனையில் மார்ச் 9ம் தேதி உடற்கூறாய்வு நடைபெற்றது. ஆனால் இதுவரை உடற்கூறாய்வு அறிக்கையை குடும்பத்தினருக்கு கொடுக்க மறுக்கின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு நடைபெற வெண்டும். மேலும் காவலர்கள் தாக்கி உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும் என மனு செய்திருந்தார்.
கோபம் வந்தால் தாக்குவார்களா?
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, ஏன் காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கோபம் வந்தால் தாக்குவார்களா? இந்த வழக்கில் வழக்குப்பதிவு விவரங்கள் மற்றும் உடற்கூராய்வு அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok sabha election 2024: "திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேலி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok sabha election 2024: "திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேலி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion