மேலும் அறிய

ஹால்மார்க் தங்க நகை வழக்கு: BIS நிர்வாக இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு

மனுதாரரின் மனு குறித்து BIS நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தங்க நகை கடையில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்க நகை வாங்கியவர் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய கோரிய வழக்கில், மனுதாரரின் மனு குறித்து BIS நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தேனி மாவட்டத்தில் ஹால்மார்க் மையம் நடத்தி வருகிறேன். தங்க நகைகள் விற்பனை செய்பவர்கள் நகைகளுக்கு ஹால்மார்க் சென்டரில் பரிசோதனைக்கு உட்படுத்தி ஹால்மார்க் அங்கீகாரம் பெற்று செல்வது வழக்கம்.

ஹால்மார்க் சென்டரில் நகைக்கடை வியாபாரிகள் கொண்டு வரும் தங்க நகைகளில் தோராயமாக ஒன்றை தேர்வு செய்து பரிசோதனை செய்து அதற்கான பிரத்தியோக எண் கொடுக்கப்படும். மேலும் இந்த நகைகள் குறித்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆனால், நகை கடை வியாபாரிகள் நகைகளை விற்பனை செய்யும் பொழுது போலியான ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற நகைகளை விற்பனை செய்வதினால் அதிக அளவு ஹால்மார்க் சென்டர்களே பாதிப்பு அடைகின்றனர்.

எனவே, நகைக் கடையில் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்க நகை வாங்கியவரின் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை ஹால்மார்க் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் போலி நகைகள் விற்பனை செய்தால் எளிதாகக் கண்டறிய முடியும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தங்க நகை கடையில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்கம் வாங்கியவர் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனு குறித்து BIS நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
ABP Premium

வீடியோ

EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்
Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
ISRO on Chandrayaan 4: சந்திரயான்-4; நிலவில் இடத்தை குறித்த இஸ்ரோ; லேண்டரின் பயணம் எப்போது.? வெளியான முக்கிய தகவல்
சந்திரயான்-4; நிலவில் இடத்தை குறித்த இஸ்ரோ; லேண்டரின் பயணம் எப்போது.? வெளியான முக்கிய தகவல்
US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
Affordable Mileage Bikes: 60 - 80 கிமீ மைலேஜ்; மலிவு விலை; உங்களுக்கான பெஸ்ட் பைக் எதுன்னு வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
60 - 80 கிமீ மைலேஜ்; மலிவு விலை; உங்களுக்கான பெஸ்ட் பைக் எதுன்னு வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Tata Sierra vs Renault Duster: டாடா சியாராவோ, ரெனால்ட் டஸ்டரோ வாங்குற Plan இருக்கா.? அப்போ எது சிறந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்ல.!
டாடா சியாராவோ, ரெனால்ட் டஸ்டரோ வாங்குற Plan இருக்கா.? அப்போ எது சிறந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்ல.!
Embed widget