மேலும் அறிய

Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் மதுரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது

தமிழக சாராய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் மு.கருணாநிதி தான். திமுக கட்சி வேரோடு அழிக்கப்பட வேண்டிய தீய கட்சி- பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா காட்டம்.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியை வழங்கினார். தொடர்ந்து 22-ம் தேதி தமிழக முழுவதும் பா.ஜ.க சார்பாக கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்ப தமிழக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மதுரையில் ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் பா.ஜ.கவினர் 300க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ட்ரக்சர் ஒன்ற பாடை போல் வடிவமைத்து மலர்களை தூவி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.கவினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இன்றி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதால் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா மாவட்ட தலைவர் சுசீந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசிலும் பரபரப்பு ஏற்பட்டது.

சாராய உயிரிழப்பை தடுக்க துப்பில்லை

இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களை சிந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் எச் ராஜா பேசும்போது...,” முதலமைச்சர் நேற்று சட்டமன்றத்தில் கள்ளச்சாராய விவகாரத்தில் நான் ஓடி ஒளியவில்லை என்று பேசினார். ஆனால், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார். பா.ஜ.கவின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விமர்சனத்தை தாங்கிக் கொள்ள முடியாத கோழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விஷ சாராய உயிரிழப்பை தடுக்க துப்பில்லாத ஸ்டாலின் அரசு எங்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கிறது. தமிழக மக்கள் 40க்கு 40 சதவீதம் என்று திமுகவிற்கு ஓட்டு போட்டது கொள்வதற்கு தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

57 இளம் விதவைகள் அதிகரிப்பு

சாராய சாம்ராஜ்யத்தின் நிறுவனரே கருணாநிதி என்ற தீய நபர்தான். திமுக ஸ்டாலின் குடும்பம் கொலைகார குடும்ப ஆட்சியாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்து காவல்துறை குண்டர்களை வைத்து பா.ஜ.கவினரை தடுக்கிறார். கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்த நபர்களின் போட்டோக்களை வீடு வீடாக சென்று சேர்த்தால் காவல்துறையினர் தடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். மோசமான தீய அரசு திமுக. இந்த தீய அரசு வேரோடு வேராக அழிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஆபத்துதான். இளம் விதவைகள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்று கனிமொழி சொன்னார். உங்கள் அண்ணன் ஸ்டாலின் இன்னும் 57 இளம் விதவைகளை கூட்டி உள்ளார். தமிழக பாசிச திமுக காட்டுமிராண்டி அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நேற்றைய தினம் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நான் பயந்து ஓடி ஒளியவில்லை என்று சொல்கிறார். இந்த பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தை சந்திக்க முதலமைச்சருக்கு தைரியம் இல்லை. தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் மு கருணாநிதி. 1977-ல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள். என்னைக்கு இந்த கருணாநிதி அரசு சாராய அரசாக மாறியதோ அன்றில் இருந்து தமிழகத்தில் பெண்களின் தாலி அறுப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. 57 பேர் இறந்ததை பற்றி கவலைப்படாத தமிழக சீப் மினிஸ்டர் ஒரு கோழை. ஓடி ஒளியும் கோழை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று காட்டமாக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget