'எல்லோரும் மாஸ்கோட வாங்க' மதுரை அரசு மருத்துவமனையில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்
மதுரையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதாவது நேற்று முன்தினம் மதுரையில் 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிவதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
#மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முககவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.......!#madurai | #grh | #coronavirus
— arunchinna (@arunreporter92) April 1, 2023
| #governmenthospital | @Subramanian_ma | #MASK
| pic.twitter.com/hbGaBvlm8G
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா அச்சம்:
இருப்பினும், பல்வேறு வைரசுகள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுபோல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் இன்று முதல் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்