மேலும் அறிய

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  தாய்மார்கள்  உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியரின் தணிக்கை குறித்து மதுரையில் சுகாதாரத்துறை விசாரணை மற்றும் சுமூக பேச்சுவார்த்தை குழு நேரில் விசாரணை.

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில்  பிரசவத்திற்காக மானகிரி நகர்புற சுகாதார மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்ப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை துறையில் கடந்த 29ம் தேதி அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் சில நிமிடத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தரப்பட்டது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக பெண் உயிரிழந்த விவரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் வினோத் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்திற்கு சென்று உயிரிழந்த கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில்  தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

இதுகுறித்து மருத்துவ அறிக்கை ஆவணங்கள் மாற்றி எழுதப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டினர். இதனால் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் இருந்து அனுப்பி வைக்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுவருவதாக குற்றம்சாட்டி நகர்புற சுகாதார நிலைய செவிலியர்கள் மனு அளித்தனர். இதன் காரணமாக இந்த உயிரிழப்பு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தணிக்கை நடத்தினார். அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி உயிரிழந்த செம்மலர் மற்றும் 5-ம் தேதி உயிரிழந்த குப்பி ஆகிய இரு தாய்மார்களின் உயிரிழப்புகள் குறித்தும் தணிக்கை ஆய்வு நடத்தினார்.  அந்த அறிக்கையில் இரண்டு தாய்மார்கள் உயிரிழந்த விவகாரத்தில் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை ஆவணங்களும், அரசு ராஜாஜி  மருத்துவமனை மகப்பேறுத்துறையில் உயிரிழந்த பின்பாக அளிக்கப்பட்ட சிகிச்சை அறிக்கையிலும் வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில்  தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

இதனை அடிப்படையில் மகப்பேறுத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மருத்துவமனை முதல்வர் உரிய நடவடிக்கை வேண்டும் என கூறினார். ஆனாலும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் தனது தணிக்கை அறிக்கையை சுகாதாரத்துறைக்கு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். இந்த தணிக்கை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்த தணிக்கையில் உயிரிழந்த தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாததும் உயிரிழந்தவர்கள் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் திருத்தம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகான மருத்துவ அறிக்கையில்  உயிரிழந்த தாய் ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளிக்காமலயே உயிரிழந்த பிறகு செயற்கை சுவாசம் கொடுத்துள்ளதாகவும் திருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. 

மதுரை அரசு மருத்துவமனையில்  தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

அதன்படி உயிரிழந்த தாயார் செம்மலரின் தணிக்கை அறிக்கையில்

1)28.8.23 அன்று இதய சிகிச்சை நிபுணரை அழைத்துள்ளதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது  , 
2) 28.8.23மற்றும்29.8.23 ஆகிய தேதிகளில் நோயாளிக்கு ஆஸ்பிரின் மாத்திரையை தந்திருந்த்தாக எழுதியிருந்ததை அழித்திருக்கிறார்கள் 
3) 31-08-23 காலை7மணிக்கு  BT/ CT ( Bleeding time / Clotting time) எனப்படும் ரத்தம் உறையும் கால  விகிதம் குறித்த டெஸ்ட் பதிவு செய்யப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது. 
4) 31.8.23 மாலை 5 மணி முதல் மாலை 5-15 வரை வாந்தி எடுத்ததாகவும் வயிறு வீங்கி காணப்பட்டதாகவும் இறுதியில் உடல் சில்லட்டும் கை கால் விரைத்தும் காணப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது 
5) தலைமை மருத்துவருக்கு 31-08- 23 அன்று மாலை 5:45க்கு தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கையெழுத்து புதிதாக போடப்பட்டுள்ளது 
6) 31-8-2023 மாலை 6 மணிக்கு நோயாளி இறந்த பின்னர் சிகிச்சையின்போது மெக்கானிக்கல் வென்டிலே வைக்கப்பட்டதாக  வென்டிலேசன் வைக்கப்படாமலே வைத்ததாக புதிதாக எழுதப்பட்டுள்ளது 
7) 01-09- 23 ஏழு மற்றும் எட்டு மணிக்கு எழுதப்பட்டுள்ள சிகிச்சை அளித்த குறிப்புகள் உள்ள பக்கம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது 

இதுபோன்று உயிரிழந்த கர்ப்பிணி குப்பி மருத்துவ அறிக்கை தணிக்கையில் 

கர்ப்பிணி OG இரண்டாவது யூனிட்டில் -18/7/2023அன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மட்டுமே இறப்பதற்கு முன் வரை எழுதப்பட்டுள்ளது

HR எனப்படும் ஹார்ட் ரேட் இதயத்துடிப்பு எண்ணிக்கையும் சிகிச்சையின் போது அளித்த மருந்துகள் விபரம் மற்றும் ஆய்வுகள் விவரம் இறந்த பிறகே எழுதப்பட்டுள்ளது. மேலும் எக்கோ எடுத்துள்ள விபரமும் அதே பக்கத்தில் புதிதாக பதிவு செய்துள்ளனர். 

மத்திய அரசின் திட்டப்படி எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரசவ நிபுண மருத்துவர்கள் சென்று அங்குள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பற்றிய பிரச்சனைகள் குறித்து முகாம் நடத்த வேண்டும் என்றும் எந்த மருத்துவரும் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து அவ்வாறு அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது. 

இவ்வாறு தாய்மார்கள் உயிரிழந்த விவகராத்தில் பிரசவகாலத்தில் பணியில் இருந்த மருத்துவர்களையும் பிரசவத்தின் போது இறந்து போனவர்களின் சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கையை உண்மைக்கு மாறாக திருத்தி எழுதியவர்களையும் பணியிடை நீக்கம் செய்யகூறி  அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தியும் இன்றுவரை அவர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்படவில்லை ஆகவே தக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு மருத்துவமனை முதல்வர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்  என குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தாய்மார்கள் சிகிச்சையின் போது உயிரிழந்த தணிக்கை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை அரசு மருத்துவமனையில்  தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

இந்நிலையில், இந்த இரு தாய்மார்கள் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தணிக்கை விவரம் குறித்து ஷோபா, ரத்னகுமார், பழனிக்குமார் ஆகிய மூன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய  விசாரணை குழு மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்புற சுகாதார மைய செவிலியரகள், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்திலும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதேபோன்று இரு தரப்பிலும் சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.நிர்மல்சன், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் டாக்டர்.சாந்தா ஆகியோர் அடங்கிய குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அரசு மருத்துவர்கள் தரப்பில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் அத்துமீறி மகப்பேறு சிகிச்சை மையத்துக்குள் வந்து தங்களிடம் வாக்குவாதம் செய்ததாக அரசு மருத்துவர்கள் குற்றம்சாட்டி இன்று அவசரமில்லா அறுவைசிகிச்சைகளை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மதுரை மாநகராட்சி நகர்புற சுகாதார மையங்களில் இருந்து அனுப்பப்படும் கர்ப்பிணி பெண்களை கடைசி நேரத்தில் அனுமதிக்கப்படுவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் இக்கட்டான சூழலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.  

மேலும் 18 ஆயிரம் ரூபாய் கர்ப்பிணி தாய்மார்கள் உதவித்தொகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மட்டுமே கிடைக்கும் என்பதாலும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் பற்றாக்குறை இருப்பதாகவும், அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனையில்  தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம்; சுமூக பேச்சுவார்த்தை குழு விசாரணை

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் பேசியபோது,”மாநகராட்சி சுகாதார அலுவலர் வேண்டும்  எனறே  தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சை குறித்து மாநகராட்சி மருத்துவ அலுவலரே ஈடுபட்டுள்ளார். அவரை  பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அது வரை  மதுரையில் அரசு மருத்துவ மனையில்  அக் 3 முதல் அறுவை சிகிச்சை புறக்கணித்து  போராட உள்ளோம். மதுரை மாவட்ட ஆட்சியர் 2 கர்ப்பிணி பெண் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறித்து  மாவட்ட ஆட்சியர் இதில்  வல்லுநர்  கிடையாது. அவர் மாநில ஆய்வுக்கு  தான் அனுப்பி இருக்க வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியருக்கு  தவறான தகவல் கொடுத்து உள்ளனர். அதனால் அவர் தவறாக எழுதி உள்ளார்.  ஆவணங்கள்  ஏதும்  MISS USE பண்ணவில்லை. மாவட்ட ஆட்சியர்  மருத்துவ வல்லுநர் கிடையாது.  அவர்  மேல் நடவடிக்கைக்கு  பரிந்துறை செய்ய வேண்டுமே தவிர. மாவட்ட ஆட்சியரே,  மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூற முடியாது.  மாவட்ட ஆட்சியர் நீதிபதி ஆக கூடாது” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget