மேலும் அறிய
மதுரை முதியோர்களுக்கு நற்செய்தி, வீட்டிற்கே ரேஷன் பொருட்கள்: டிசம்பர் 2025-ல் காத்திருக்கும் திட்டம்!
முதியோர் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடை பொருள்
திட்டம் சார்ந்த பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண் மற்றும் முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் தெரிவித்து தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், வீட்டிற்கே சென்று பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், டிசம்பர் 2025 மாதத்திற்கு 02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த திட்டம் சார்ந்த பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண் மற்றும் முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் தெரிவித்து தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















