மேலும் அறிய
கருப்பணசாமி கோயில் குடமுழுக்கில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் - 107 பேர் மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் கோவில் குடமுழுக்கில் உணவருந்தியவர்களில் 107 பேர் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி சரணவன் தகவல்.

மதுரை அரசு மருத்துவமனை
விருதுநகர் கோவில் குடமுழுக்கில் உணவருந்தியவர்களில் 107 நபர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோயிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி மயக்கமடைந்தனர். இதனிடையே பாதிப்படைந்த 150 க்கும் மேற்பட்டோர் அ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
107 பேர் சிகிச்சைக்காக அனுமதி
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை சிகிச்சைக்காக இதுவரை மொத்தம் 107 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 41 பெண்கள், 55 ஆண்கள், குழந்தைகள் 11 பேர் என மொத்தம் 107 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதா னத்தின் உணவு, குடிநீர் அருந்தியதன் காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நலமாக உள்ளனர்" என்றார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















