பரபரப்பு.. மதுரை உசிலம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்வு
உசிலம்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு, போலீசார் தொடர் விசாரணை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், அனுசியா வெள்ளையப்பனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்களில் பணியாற்றி வந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி மற்றும் புளியகவுண்டன்பட்டி, அழகுசிறையைச் சேர்ந்த பிரேமா என்ற 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
#madurai | உசிலம்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலி - மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு விபத்து ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.#Usilampati pic.twitter.com/dUoyGP48T1
— arunchinna (@arunreporter92) November 10, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்