மேலும் அறிய
Advertisement
ஐஎஸ்ஐ முத்திரை போல திமுக அரசுக்கு ஊழல் முத்திரை குத்தப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி
தி.மு.க., பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்ததில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுரை, வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க., இடைகால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் டாக்டர் சரவணன் 10 ஆயிரம் பேர் இணையும நிகழ்வு நடைபெற்றது. அப்போது எடப்பாடி கே. பழனிசாமி மேடையில் பேசுகையில்,” தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில் 90% வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஊழலை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என்கிறார் தங்கம் தென்னரசு. எதிர்கட்சியான அதிமுக தான் ஊழலை பேச தகுதி உள்ள கட்சி. ஐ.எஸ்.ஐ முத்திரை போல திமுக அரசுக்கு ஊழல் முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஊழல் செய்வதில் முதல் மாநிலம் தமிழ்நாடு.
அ.தி.மு.க., அரசின் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் கட் பண்ணும் வேலையை தான் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. ஏழை மக்களுக்கான இந்த திட்டத்தில் கூட ஊழல் செய்த ஒரே ஆட்சி தி.மு.க., ஆட்சி தான். மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்கிறார்கள். அப்படி இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மேலும் பல மின்சார மானியங்கள் ரத்தாகும்.
மதுரையில் வைகை ஆற்றில் இருபுறமும் சாலைகள் அமைப்பது முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் உருவாக்கி திட்டத்தில் சில வற்றை தான் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்து வருகிறார். அதிமுக தை பொங்கலுக்கு ரூ.2500 கொடுத்தோம், தற்போது ரூ.1000 போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. கரும்பு தர மறுத்தனர் அதையும் போராடி பெற வேண்டி இருந்தது. இதற்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள், கவர்ச்சி திட்டம் அறிவித்து திமுக மக்களை ஏமாற்று கின்றனர். அதிமுக பொங்கலுக்கு ரூ.2500 கொடுக்கும் போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது கூறினார்கள். தற்போது முதல்வராக இருந்து கொண்டு ரூ.5000 கொடுக்க வில்லை. திமுக கடந்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வெளி மாநிலத்திலிருந்து கொடுத்தனர் அதில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. பொங்குல் தொகுப்பில் சர்க்கரை கரைந்து ஓடியது, புளியில் பல்லி, அரிசியில் வண்டு இருந்தது. நமது மாநிலத்தில் பொருட்களை வாங்கினால் ஊழல் செய்ய முடியாது அதனால் வெளி மாநிலத்தில் இருந்து பொருட்கள் வாங்கினார்கள்.
சொத்து வரி, சாக்கடை வரி, மின்சார வரி பல மடங்கு உயர்த்தியுள்ளனர். கொரோனா தொற்றில் மதுரையில் அதிமுகவினர் சிறப்பாக செயல்பட்டார்கள். அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு மருத்துவ வசதிகள் என அனைத்து சிறப்பாக செய்தனர். டாக்டர் சரவணன் சிறப்பாக செயல்பட கூடியவர் அவருடன் அனைவரும் ஒன்று இணைந்து அதிமுகவை வளர்க்க வேண்டும்” என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS Speech: தி.மு.க. அமைச்சர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion