மேலும் அறிய
Advertisement
மதுரையில் ரூ.102.98 கோடி மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
பொருட்களின் தரம் குறித்து தர பரிசோதனைக் குழுவினர் மூலமாக கண்காணிக்கப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்
மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 30ஆயிரத்து 295 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 102.98 கோடி மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். தரமான பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க தரபரிசோதனைக்குழு மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் 9லட்சத்தி 30ஆயிரத்தி 295 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 102.98 கோடி மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் தொடங்கிவைத்தார்.@SRajaJourno @mducollector @SuVe4Madurai @abpnadu @ThanniSnake @arunreporter92 pic.twitter.com/1Q35fYCyP8
— arunchinna (@arunreporter92) January 9, 2023
மதுரை மாவட்டம் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் , கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் , உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், “மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 30ஆயிரத்து 295 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 102.98 கோடி மதிப்பிலான பொங்கல் தொகுப்பு இன்று தொடங்கி வரும் 13ஆம் தேதிவரை வழங்கப்படும். பரிசுதொகுப்பில் வழங்கும் பொருட்கள் தரமானதாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் ”இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
மதுரை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion