மேலும் அறிய

பைக் , வீடு மற்றும் சேப்டி லாக்கர் ஆகியவற்றின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

பூட்டு சாவி தொழில் செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.

கைத்தொழில் மூலம் தொலைந்து போன சாவி செய்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி லைசன்ஸ் கொடுக்க வேண்டும்.

பூட்டு சாவித் தொழில்
 
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சாவி தொழிலாளர்கள் நலச்சங்கம் திறப்பு விழா நிகழ்வு சாவி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கௌசல் தலைமையில் தலைவர் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரையில் உள்ள சாலையோர சாவித் தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களை சாவித் தொழிலாளர் நலச் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சாதி தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கௌசல் மற்றும் ஆனந்தன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது...," பூட்டு சாவித் தொழில் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் கையில் சாவி தொழில் செய்யும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  பூட்டு சாவி சாலையோர தொழிலாளர்களிடம் போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள். ஏராளமான சாலையோர பூட்டு சாவி தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் இணைந்து வருகிறார்கள். 
 
சாவித் தொழிலாளர்களுக்கு உரிய லைசென்ஸ் கொடுக்க வேண்டும்
 
சாவித் தொழிலாளர்கள் கைத்தொழிலாக இதை செய்கிறார்கள். இது ஆதி காலத்து கலையாகும், இது தற்போது அழிந்து கொண்டே வருகிறது. பூட்டு சாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாங்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சாலையோர சாவித் தொழிலாளர்கள் பலரும் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போதைய தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம். சாவித் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இனிமேல் இந்த தொழிலை நாம் செய்ய வேண்டுமா நமக்கான மரியாதை இங்கு இல்லை என்று சாவி தொழிலாளர்கள் நினைக்கிறார்கள்.  மாநகராட்சியில் இருந்து சாவித் தொழிலாளர்களுக்கு உரிய லைசென்ஸ் கொடுக்க வேண்டும்.எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த மாதிரி இருக்கும். 
 
சாலையோர சாவி தொழிலாளர்களை எங்கள் சங்கத்தில் இணைத்து வருகிறோம். 
 
அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக சாவித் தொழிலை அரசு கொண்டுவர வேண்டும். சாவி போட வரும் வாடிக்கையாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தரமற்ற ஒரு பொருளை சாவியை நீங்கள் போடுவதால் வாகனங்கள் மற்றும் வீடு பூட்டு கருவிகளில் சிக்கல்கள் ஏற்படும். தமிழ்நாடு முழுவதும் 50,000 பூட்டு சாவி செய்யும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எங்களின் சங்க உறுப்பினர்களுக்கு இந்த தொழிலை சொல்லிக் கொடுத்து வருகிறோம். பெரும்பாலான சாலையோர சாவி தொழிலாளர்களை எங்கள் சங்கத்தில் இணைத்து வருகிறோம். 
 
இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு? 
 
கார் அல்லது பைக் வீட்டு சாவி தொலைந்து விட்டால் வாடிக்கையாளர்கள் வீட்டின் முன்பு நின்று ஒரு போட்டோவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க வேண்டும். வாகனமாக இருந்தால் வண்டியின் ஆர்சி புக் FC இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் வண்டிக்கான ஆவணங்களை வாங்கி டாக்குமெண்டேஷன் செய்து ஆவணங்களை சரிபார்த்துவிட்டு சாவி செய்து தருவோம். ஆதார் கார்டில் இருக்கும் ஓனரும் ஆர்சி புக் இருக்கும் ஓனரும் சரியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால்தான் சாவி போட்டு கொடுக்க முடியும்.  அதேபோல் சாலையோர சாவி  தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறோம். குறிப்பாக ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டும்தான் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு சாவி போட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். 
 
டிரேட் லைசென்ஸ் எங்களுக்கு வேண்டும்
 
பழைய வாகனங்கள் வாங்கும்  வாடிக்கையாளர்கள் யாரும் ஆர்சி புக்கில் பெயரை மாற்ற மாட்டார்கள். வாகனத்தின் ஆர்சி புக் ஓனர் வந்தால் தான் சாவி போட்டு தருவோம் என்று சொல்ல முடியாது. யார் வருகிறார்களோ அவர்களின் ஐடி ப்ரூப் வாங்கிவிட்டு சாவி போட்டு தருகிறோம். சேப் லாக்கர் சாவி போட்டு ஓபன் செய்வதில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளோம். சேப் லாக்கர் எப்போது வாங்கப்பட்டது. ஆவணங்கள் சரியாக இருந்தால் தான் சேப் லாக்கர் சாவி போட்டு கொடுக்க வேண்டும் என்று அனைத்து தொழிலாளர்களுக்கும் வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் விஜயக்கு எங்களுடைய பெரிய கோரிக்கை என்னவென்றால் டிரேட் லைசென்ஸ் எங்களுக்கு வேண்டும் நாங்களும் தொழில் வரி கட்டி மாநகராட்சி சான்றிதழ் உடன் லைசன்ஸ் உடன் எங்கள் தொழிலை பாதுகாப்போடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் எனவே இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget