மேலும் அறிய

சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !

இந்தக் கடிதத்திற்கு, “மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு: உரிய விசாரணை கோரி ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம். மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில்.
 
சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
 
"ஒன்றிய அரசின் கல்வி வாரியத்தின் (CBSE) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) தளத்தில் உள்ள கடுமையான தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து, மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு அவசரக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு ஓட்டைகள்:
 
19 வயதுடைய நெறிமுறை ஹேக்கர் (Ethical Hacker) திரு. நிசர்கா அதிகாரி என்பவர், சிபிஎஸ்இ-இன் விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு ஓட்டைகளை சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இது பல இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முதல்வர்களின் டேஷ்போர்டுகளில் இருந்த, மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ளிட்ட சுமார் 93 இலட்சம் தரவு வரிசைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளன. இவற்றை மிக எளிதாகச் சிதைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ (Tamper) சாத்தியக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) சேமிப்பகத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களை அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் கூட, OTP அங்கீகாரத்தைத் தவிர்த்துவிட்டு (Bypassing OTP) அணுகும் நிலை இருந்துள்ளது.
 
நிர்வாகத்தின் அலட்சியம்:
 
இந்த விவகாரம் முதலில் வெளிவந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்குறைபாடுகளை மூடிமறைக்கவே முயன்றனர். பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகே தவறு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த குளறுபடிகளால் அதிருப்தியடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், விண்ணப்ப விண்டோ திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 56,000-க்கும் மேற்பட்டோர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய மாணவர்களில் கிட்டத்தட்ட 23% பேர் (4,04,319 மாணவர்கள்) தங்களின் விடைத்தாள் நகல்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளது, வாரியத்தின் மீதான நம்பகத்தன்மை சரிந்துள்ளதைக் காட்டுகிறது.
 
விசாரணையில் உள்ள குறைகள்:
இந்த விவகாரம் தொடர்பாகச் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை செயலகம் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனினும், இந்த விசாரணையின் வரம்புகள் மிகவும் குறுகியதாக இருப்பதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை மட்டுமே கொண்டு விசாரணையை நடத்துவது போதாது என்றும், தொழில்நுட்பக் குளறுபடிகளை ஆராய இணையப் பாதுகாப்பு (Cybersecurity) நிபுணர்களை ஏன் குழுவில் சேர்க்கவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
 
கோரிக்கை:
உயர் கல்விச் சேர்க்கைக்கான கால அவகாசம் நெருங்கி வருவதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான நிலை அறிக்கையை (Status Report) முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுவெளியில் வெளியிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி. அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தக் கடிதத்திற்கு, “மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது." - எனவும் மதுரை எம்.பி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget