மேலும் அறிய
மதுரையில் இரு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் !
ஒரு வாரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மகிழ்ச்சியுடன் இருந்த பிள்ளைக்கு விஷம் கொடுத்த தந்தையின் செயல் சோகத்தில் முடிந்தது.

தற்கொலை
Source : twitter
மதுரையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை - போலீஸ் விசாரணை.
குடும்ப சண்டை
மதுரை மாநகர் முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (39) - காயத்ரி (29) தம்பதியினர் யுவஸ்ரீ -(10) கனிஷ்கா (5) என்ற இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். கோபிராஜ் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் (மீனாட்சிமிஷன் ) மருத்துவமனையில் எலக்ட்ரெசியனாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருந்துவந்த நிலையில் கணவன் - மனைவியிடையே கடந்தவாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காயத்ரியின் உறவினர்கள் கோபிராஜிடம் நேரில் வந்து பேசி சமாதானம் செய்துவைத்துள்ளனர்.
தூக்கிட்டு தற்கொலை
பின்னர் கோபிராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பத்தோடு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி காயத்ரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கோபிராஜ் தனது இரு மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். நவம்பர் 30 ஆம் தேதி மூத்தமகள் யுவஸ்ரீக்கு பிறந்தநாள் என்பதால் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுள்ளதாக தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வரை தனது இரு பெண் பிள்ளைகளுடன் இருந்து வந்த நிலையில், பிள்ளைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இருவரும் மயங்கிய நிலையில் கழுத்தை ஒயரை வைத்து நெரித்து விட்டு, குழந்தைகள் உயிரிழந்தவுடன் கோபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுதனர்.
கோபிராஜ் பணிக்கு செல்லாத நிலையில் நீண்ட நேரம் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில், பக்கத்து வீட்டார் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக பார்த்த போது, தந்தை மற்றும் இரு பிள்ளைகள் என மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நன்கு பழகி வந்தவர்கள். இதனால் இரு குழந்தைகள் இறந்த உடலைப் பார்த்து தெருவில் உள்ள அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது கோபிராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக இரண்டு பக்க கடிதம் எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பிறந்த நாள் கொண்டாடவிருந்த மகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement