மேலும் அறிய
Advertisement
மதுரையில் பெண் கொலையில் 25 நாள் தேடுதலில் சிக்கிய கொலையாளி - துப்புக்கொடுத்த பட்டன் செல்போன்
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தில் பெண்ணின் உடலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் 25 நாட்களாக இரவு பகலாக புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தோப்பில் நடந்த கொடூர கொலை
மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், கடந்த ஜூலை 10-ம் தேதியன்று பெண் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் நேரில் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த பெண் குறித்தான தகவல்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இறந்த பெண்ணினுடைய புகைப்படத்தை அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த பெண் சிவகங்கை இடைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி (45) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடற்கூராய்விற்கு பின்னர் உடலானது பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கொலை எப்படி நடந்தது கொலையாளி யார்? என சிலைமான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறைக்கு சவால்
இதில் கொலையாளியை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாக இருந்து வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பெயரில் சிலைமான் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் ஊமச்சிகுளம் டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர புலன் விசாரணையை தொடங்கினர். கலைச்செல்வியின் செல்போனில் 100க்கும் மேற்பட்ட போன் நம்பர்கள் மட்டுமே இருந்த நிலையில் கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் அவருடன் பழகியவர்கள், உறவினர்கள் என 23 நாட்களாக தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட செல்போன் எண்களை ஆய்வு மேற்கொண்டு தேடிவந்தனர். ஒரு காலகட்டத்தில் சோர்ந்து போன தனிப்படையினரை சந்தித்த மாவட்ட எஸ்பி. அரவிந்தன் தனிப்படையினரை சந்தித்து இந்த கொலை வழக்கை பொறுமையாக கையாளுங்கள் என நிச்சயமாக கொலையாளியை சிக்குவார் என கூறியுள்ளார். இதையடுத்து சிசிடிவி கேமராக்களை மீண்டும் தனிப்படையினர் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். கொலை சம்பவ நடைபெற்ற இடத்தில் ஒரே ஒரு பைக் மட்டும் கடந்துசென்றது தெரியவந்துள்ளது. அதே பைக் சிறிதுநேரத்தில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள சென்றதும் தெரிந்துள்ளது. அதே நேரத்தில் கலைச்செல்வியின் செல்லபோனுக்கு ஒரு அழைப்பு சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த செல்போன் எண் விசாரித்தபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் செல்போன் எண் என தெரியவந்தபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் உறவினர் அளித்த அடையாளத்தின் அடிப்படையில் வாகன உரிமையாளரும் செல்போனில் பேசியவரும் ஒரே நபர் என தெரியவந்துள்ளது.
செல்போன் - சி.சி.டி.வி உதவி
இதனையடுத்து மாற்றுத்திறனாளுடைய செல்போன் எண்ணில் இருந்து அந்த கொலையான பெண்ணுக்கு அழைப்பு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் அது குறித்து விசாரணை நடத்தியபோது பார்வையற்ற மாற்றுத்திறளானியின் அருகில் இருந்த உறவினர் ஒருவர் சம்பவத்தன்று செல்போனில் பேசிய நபரின் அடையாளம் குறித்தும், தெப்பக்குளம் பகுதிக்கு கலைச்செல்வி வந்து பின்னர் ஆட்டோவில் அனுப்பிவைத்து அதனை பின்தொடர்ந்து கொலையாளி சென்றது குறித்தும் அடையாளம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை பார்த்தபோது அந்த நபர் கூறிய சம்பவம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில் விசாரணையை நடத்த தொடங்கினர். அப்போது பைக் உரிமையாளரான மானாமதுரை அன்னியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த, கூட்டுறவு வங்கி ஊழியர் இளங்கோவன் என்பவரை விசாரணை செய்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
போலீஸ் புலன் விசாரணை
அப்போது இளங்கோவன் அளித்த வாக்கு மூலத்தில் ”கலைச்செல்வி இடைக்காட்டூர் பகுதியில் கடை வைத்திருப்பதாகவும், நாள்தோறும் தான் வங்கிக்கு செல்லும் பொழுது பழக்கம் ஏற்பட்டு 5 வருடமாக பழகி வந்ததாகவும், இந்நிலையில் கலைச்செல்விக்கு 6 லட்சம் ரூபாய் வேறொரு நபர்களின் மூலமாக வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கான வட்டி செலுத்தாத நிலையில் அந்த வட்டியை தானே செலுத்தி வந்ததாகவும், இதனால் தனது ஊதியம் குறைவதில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் தான் வாங்கி கொடுத்த பணத்தை கொடுக்கும்படி கலைச்செல்வியிடம் தொடர்ந்து கேட்டும் தராத நிலையில் ஆத்திரத்தில் கலைச்செல்வியை போன் செய்து வரவழைத்து தோப்புக்குள் வைத்து கொலை செய்ததாகவும்” கூறியுள்ளார். செல்போன் மற்றும் சி.சி.டி.விகள் உதவியால் போலீஸ் இந்த கொலையை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion