மேலும் அறிய

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது! அடுத்தடுத்து அதிரடி கைதுகள், விசாரணை வளையத்தில் முக்கிய புள்ளிகள்?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி முறைகேடு மேயரின் கணவர் பொன்வசந்த் கைது - அடுத்தடுத்து தொடரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாரணைக்குழு.

வரிவிதிப்புக்குழு தலைவரின் கணவரால் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய நபர்கள் - மேயர், மண்டல தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைதாக வாய்ப்பு?

முறைகேடு தொடர்பாக ஆணையாளர் புகார்

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றிய போது.. மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.
 
மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்
 
இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணை செய்தது. இதில் வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை, முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் உமா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. 
 
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது நடவடிக்கை

அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
 
மேயர் கணவர் கைது

அப்போது கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மநாகராட்சிக்கு உதவி ஆணையாளராக சென்று பணியாற்றிய சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மதுரைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்படுகிறார். மேலும்  மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கை விசாரிக்க  உயர் நீதிமன்ற  மதுரை அமர்வு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிரமான விசாரணை நடத்தி அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர்.
 
அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் கைது

இந்த முறைகேடு வழக்கில் ஏற்கனவே ராஜினாமா செய்த மூன்று மண்டல தலைவர்கள் மற்றும் குழு தலைவர்கள்  மற்றும் மதுரை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தான் வரி முறைகேடு விவகாரம் வெளியில் வரத் தொடங்கி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், மேயரின் கணவர் என கைது செய்யப்படும் நிலையில் இது போன்ற முறைகேடுகளுக்கு அதிகாரத்தில் இருந்த மண்டல தலைவர்கள் மேயர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வரி முறைகேடு விவாகரத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget