மேலும் அறிய
ரூ.1 கோடிக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை; மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மின்சாரம் கிடையாது?
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே -8ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது - பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்.

சித்திரைத் திருவிழா
மின்சாரத்தை பயன்படுத்தியதற்கான 1 கோடி ரூபாய்க்கு மேலான நிலுவைத்தொகை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் செலுத்தவில்லை என்பதால் இந்த ஆண்டு மின்சாரம் வழங்க வாய்ப்பில்லை.
சித்திரைத் திருவிழா 2025
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி, நெடுஞ்சாலைதுறை, மின்சார துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சித்திரை திருவிழா போது மீனாட்சி அம்மன் கோவில் மாசி வீதிகளில் சுவாமி 15 நாட்கள் வீதி உலா வருவது திருக்கல்யாணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மின்சாரம் மாநகராட்சி தெரு விளக்குகள் இணைப்பு மூலமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இதுவரையும் மாநகராட்சிக்கு மின்சார தொகைக்கான செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு நிலுவைத் தொகை செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் மின்வாரியம் மூலமாக தற்காலிக மின் இணைப்பைப் பெற்று அதன் மூலமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். இதனால் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது மாசி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி வீதி உலாவின் போது மின்சார இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில்
மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா (அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருகின்ற 29.04.2025 முதல் 10.05.2025 வரை கொண்டாடப் படுகிறது. தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளில் சுவாமி வலம் வருவதால் இரவு நேரங்களில் அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மின் வழித்தடத்திலிருந்து அமைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மின் விளக்குகள் கடிதம் மூலம்.
தவறாக புரிந்துகொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் மின் பயன்பாட்டிற்குரிய தூய்ப்புக் கட்டணம் ஒரு மின் விளக்கிற்கு ரூ.310- வீதம் செலுத்தும் பட்சத்தில் மாநகராட்சியின் மின் வழித்தடங்களில் அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பொருத்திக் கொள்வதற்கு மாநகராட்சியின் அனுமதி வழங்கப்படும் என்ற விபரத்தினை இணை ஆணையர், செயல் அலுவலர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊடகம் மற்றும் சமூக வலைதளம் மூலம் மேற்கண்ட செய்தி தவறாக புரிந்துகொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிறப்புடன் நடைபெறுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















