மேலும் அறிய

தூய்மை நகராக மாறும் மதுரை... எழில்கூடல் எனும் சிறப்புத்திட்டம் அறிமுகம் 2000 பேர் பங்கேற்பு !

இந்த திட்டம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாபெரும் மக்கள் இயக்கமாக, மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளன.

"எழில்கூடல்" எனும் சிறப்பு திட்டத்தின்  முதல் நிகழ்வாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியினை துவக்கி வைத்தார்.

எழில்கூடல் நிகழ்வு
 
மதுரை மாவட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை பி.மூர்த்தி, மாமதுரையை தூய்மையான நகரமாக்கிட "எழில்கூடல்" எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக  அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதற்கட்டமாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சுற்றியுள்ள ஆவணி வீதி, மாசி வீதி மற்றும் ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணி செய்யவும், மேலும் இரவு முழுவதும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் தூய்மை செய்யப்பட்டு பின் அதே இடங்களில் தொட்டியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கவும், அதேபோல் இந்த இடங்களில் குப்பைகளை அங்காங்கே கொட்டாத வண்ணம் குப்பை தொட்டிகளும் வைத்து இந்த தூய்மை பணியினை மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு விழிப்புணர்வு தூய்மை பணி செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
 
தூய்மை பணியை மேற்கொண்டார்கள்
 
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் தூய்மை பணியினை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ள சன்னதி தெருவில் துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 42, 43, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 76, 85 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட அம்மன் சன்னதி & சுவாமி சன்னதி, தெற்கு சித்திரை தெரு, மேற்கு சித்திரை தெரு, வடக்கு சித்திரை தெரு, கிழக்கு சித்திரை தெரு, சொக்கப்ப நாயக்கர் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட 64 இடங்களில் 17 சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு இரண்டு முதல் மூன்று சுகாதார  மேற்பார்வையாளர்கள், 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 500 முதல் 1000 மீட்டர் தூரத்திற்கு இணைந்து குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் தூய்மை பணியை மேற்கொண்டார்கள்.
 
புதிய முயற்சி
 
மேலும் தூய்மைப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் 1000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் மூலம் அழகுபடுத்தும் பணியும், பொதுமக்கள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களை வீசாமல் இருப்பதற்காக அனைத்து மின்கம்பங்களிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வண்ண மூங்கில் கூடைகள் வைக்கப்படும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூய்மை படுத்தவும், சாலைகளில் ஓரம் உள்ள மணல்களை அகற்றவும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக பொறுப்பு நீதியின் கீழ் வாகனங்கள் பெற்று இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாபெரும் தூய்மை பணியினை தொடர்ந்து கண்காணிக்கவும் தொடர்ந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாபெரும் மக்கள் இயக்கமாக மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளன.                                                                                                
 

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget