மேலும் அறிய
விருதுநகர் மக்களே உங்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.. இனி பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம் !
நடமாடும் கடவுசீட்டு அலுவலக சேவை மூலம் விருதுநகரில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்படவுள்ளது. - முழு விவரம் உள்ளே.

பாஸ்போர்ட்
Source : Twitter
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் சிவகாசி அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்
”தமிழகத்தின் பத்து தென்மாவட்ட மக்களின் பாஸ்போர்ட் சேவையை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் சேவைகளை குடிமக்களுக்கு சரியான நேரத்தில், மிக எளிய முறையில் அணுகி சிரமமின்றி வழங்குவதற்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமானது 2007 ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நடமாடும் கடவுசீட்டு அலுவலக சேவை (Mobile Van Passport Seva)
மேலும் கடவுசீட்டு சேவையை அதிகரிக்கும் விதமாக மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின் கீழ் மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இரண்டு கடவுசீட்டு சேவை (PSK) மையங்களும் மற்றும் இதன் விரிவாக்கமாக 2018 ஆம் ஆண்டு புதிதாக எட்டு தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்களும் (POPSK) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை மேலும் விரிவு செய்யும் பொருட்டு தொலை தூர பகுதிகளுக்கும் பாஸ்போர்ட் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், பாஸ்போர்ட் சேவையை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும் வெளியுறவு துறை அமைச்சகமானது நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை (Mobile Van Passport Seva) என்ற சேவையை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
80 விண்ணப்பங்கள் வரை பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்கலாம்
இந்த சேவையானது விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருவில்லிப்புத்தூர் ரோட்டில் அமைந்துள்ள சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வரும் 02.09.2025(செவ்வாய்) மற்றும் 03.09.2025 (புதன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டு தினங்களுக்கு 80 விண்ணப்பங்கள் வரை பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு முன் அனுமதி பெற பாஸ்போர்ட் (Passport Seva https://www.passportindia.gov. in/) இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து "RPO Madurai Sivakasi Mobile Van" என்பதை தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் சிவகாசி அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” - என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பா.வசந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















