மேலும் அறிய
மதுரை மக்களே தீரும் தலைவலி... வருகிறது புதிய பேருந்துநிலையம் - எங்கு தெரியுமா..?
Madurai Checkanurani New Bus Stand: மதுரை அருகே செக்காணூரணி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இணைந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

புதிய பேருந்துநிலையத்திற்கு பூமி பூஜை
Source : whats app
திருமங்கலம் செக்காணூரணியில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
முக்கிய பேருந்து நிலையம்
மதுரை மாவட்டம் செக்காணூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளுக்கு செல்ல முக்கிய பேருந்து நிலையமாக செக்காணூரணி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலைய கட்டிடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட சூழலில் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்ட இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள்
இந்த கோரிக்கையின் அடிப்படையில் செக்காணூரணி பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட சுமார் 8 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பழைய பேருந்து நிலையம் கடந்த வாரம் இடிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் கட்ட அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பூமி பூஜை செய்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.
தமிழகத்தில் புதிய திட்டங்கள்
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். மேலும், ஒவ்வொரு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அந்தந்த துறை அலுவலர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், சாலைகள் அமைக்கும் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், நீர் வழங்கல் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்
அந்த வகையில், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செக்காணூரணியில் ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவில் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தங்கமா, வெள்ளியா..? குறுக்கே வந்த கெளசிக்... இன்றைய விலை தெரியுமா ?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion