தங்கமா, வெள்ளியா..? குறுக்கே வந்த கெளசிக்... இன்றைய விலை தெரியுமா ?
மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது, என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மதுரை மல்லிப்பூவின் விலை இன்று (01.02.2025) நிலவரப்படி கிலோ 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம்
மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்மீகநகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மல்லிப்பூவின் விலை இன்று (01.02.2025) நிலவரப்படி கிலோ 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (01.02.2025)
எகிறிய மல்லிப்பூ விலை

